செய்திகள் :

Ramayana: "சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!" - சாய் பல்லவி

post image

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் பிரத்தியேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நேற்றைய தினம் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.

படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் பற்றி பகிர்ந்துகொண்டனர்.

Ramayana Movie
Ramayana Movie

நடிகை சாய் பல்லவி பேசுகையில், "நடிகர்களுக்கு இது போன்ற கதாபாத்திரங்கள் கிடைப்பது எளிதான விஷயம் அல்ல.

ஒரு தெய்வத்தின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது அத்தனை சுலபமல்ல. அந்தப் படைப்பை மிகச் சிறந்த வடிவமாக மாற்றுவதற்குத் தங்களின் இதயத்தையும் ஆன்மாவையும் அர்ப்பணித்து உழைக்கும் ஒரு குழு கண்டிப்பாகத் தேவை.

சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு எழுதி வைத்துக்கொண்டு நடிக்கவில்லை.

நான் அமைதியாக அமர்ந்து தியானம் செய்யும்போது, 'சீதை அம்மா, நீங்கள் என் மூலமாகச் செயல்படுங்கள். என் வழியாக வெளிப்படும் நடிப்பு எதுவாக இருந்தாலும், அது இந்தத் திரைப்படத்திற்காக நீங்கள் விரும்புவதாகவே இருக்கட்டும்' என்று வேண்டிக்கொள்வேன்" என்றார்.

சாய் பல்லவி
சாய் பல்லவி

இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்க, சீதையாகச் சாய் பல்லவி, ராவணனாக யஷ், அனுமாராகச் சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே, சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டுத் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

வயதான தோற்றத்தில், சோர்வாக சல்மான் கான்: `அவருக்கு என்ன ஆச்சு?' - இணையத்தில் ரசிகர்கள் வேதனை

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் சல்மான் கான் மும்பையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டார். குடிசை புனரமைப்ப... மேலும் பார்க்க

72nd National Awards: 'பாஜக பிரசார படமாக இருந்தால் தேசிய விருது வழங்கப்படுமா?' - வலுக்கும் கண்டனம்!

72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருடமும் பாஜகவுக்கு ஆதரவான அரசியல் பேசும் படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.கடந்த 2024ஆம் ஆண்டு இயக்குநர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பால... மேலும் பார்க்க

ஆமீர் கானின் திருமணத்திற்கு எதிர்ப்பு; லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்; பின்னணி என்ன?

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண்டாகச் சேர்ந்து வாழ்ந்து வந்த கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் கெளரி முஸ்லிம் மதம் கிடையா... மேலும் பார்க்க

Sonam Wangchuk: "'3 இடியட்ஸ்' ராஞ்சோ கதாபாத்திரம் சோனம் வாங்சுக்தானா?' - நடிகர் ஆமீர் கான் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகள், கல்விச் சீர்திருத்தம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா போன்றவற்றை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கல்வி சீர்திருத்தவாதியும், பொறியியலாளரும், சமூக ஆர்வலரும... மேலும் பார்க்க

"நான் திருமணம் செய்த பெண்கள் மதம் மாறவில்லை" - பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு ஆமீர் கான் பதிலடி

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த கெளரி என்ற பெங்களூரு பெண்ணை குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் குறித்து மகாராஷ்... மேலும் பார்க்க

``அமீர் கானைக் கொல்பவருக்கு ரூ.5 கோடி பரிசு" - பகிரங்க மிரட்டல் விடுக்கும் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகுக் கலை நிபுணரான கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். மும்பையில் பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையான... மேலும் பார்க்க