செய்திகள் :

RCB: "Data குழு தரும் சிறிய தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன" - புவனேஷ்வர் குமார் புகழாரம்

post image

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதன் மூலம், 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார். இவர் இந்த சீசனில் மட்டும் 26 விக்கெட்களை வீழ்த்தி, பர்ப்பிள் கேப்பையும் தன் வசம் வைத்துள்ளார்.

RCB
RCB

போட்டிக்குப் பின்னர் பேசிய புவனேஸ்வர் குமார் கூறியதாவது:

“இந்த வெற்றிக்கான பெரும்பாலான பாராட்டு, திரைக்குப் பின்னால் உழைக்கும் குழுவினருக்கே செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

நானும் ஹேஸில்வுட் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பது ஒரு விஷயம். ஆனால் குழுவினர் கொண்டு வரும் சிறிய, சிறிய டேட்டாக்களும் மிகவும் உதவியாக இருக்கின்றன. சில நேரங்களில் அவற்றை நாம் கவனிக்காமல் விடலாம். ஆனால் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினால், அது அணிக்கு நல்ல பலன் தரும்.

முதல் போட்டியிலிருந்தே நாங்கள் இதைச் செய்து வருகிறோம். நாங்கள் தரவுகளை அடிப்படையாக வைத்து செயல்படுகிறோம் என்று சொல்லலாம். புதிய விஷயங்கள் ஏதாவது இருந்தால், அதைக் கவனித்து அதற்கேற்ப எங்களை மாற்றிக்கொள்ள முயற்சிப்போம். ஆனால் 100 சதவீதம் தரவுகளையே நம்பி இருக்க மாட்டோம். இருந்தாலும் அது உதவியாக இருக்கிறது.

Bhuvi
Bhuvi

பந்துவீச்சு திட்டங்கள் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதி. திட்டத்திற்கு வெளியே சிறிது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பந்துவீசினால், அது பவுண்டரிக்குச் செல்லும். அதனால் பேட்ஸ்மேன்களுக்கு இடம் கொடுக்காமல், LBW மற்றும் போல்டு அவுட்களை பெறும் வகையில் பந்துவீச முயற்சித்தோம். அது எங்கள் திட்டத்தின் முக்கிய பகுதியாக இருந்தது” என்று பேசியிருந்தார்.

மனு பாக்கரை ஒலிம்பிக் நாயகியாக்கிய `குரு' - கோச் ஜஸ்பால் ராணா திடீர் மரணம்; சாம்பியனை இழந்த இந்தியா

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் தொடரில் கெய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தா; வரலாற்று சாதனை!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்; வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா! |Live Updates

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

வடகொரிய மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை! அதிபர் கிம் ஜாங் உன்னுடன் கொண்டாடிய அரிய காட்சி

உலக நாடுகளை எப்போதுமே தனது ராணுவ பலத்தால் அதிரவைக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முற்றிலும் ஒரு மாறுபட்ட நெகிழ்ச்சியான கோணத்தில் உலகிற்கு காட்டியுள்ளனர் அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர். 'ஏஎப்ச... மேலும் பார்க்க

ஒண்ணு இல்ல, ரெண்டு! ஒரே தொடரில், கார்ல்சனின் சொந்த ஊரில் இருமுறை வீழ்த்தி பிரக்ஞானந்தா செய்த சம்பவம்

செஸ் உலகின் சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மேக்னஸ் கார்ல்சனை, அதுவும் அவரது சொந்த மண்ணில், ஒரே தொடரில் இருமுறை வீழ்த்துவதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை. அந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திக்... மேலும் பார்க்க

'காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்!' - 38 வயதில் விராட் கோலி எப்படி சாதித்தார்?

ஆர்.சி.பி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. விராட் கோலியின் நீண்ட கால கனவு இது. ஆனால், அவருடைய கேப்டன்சியில் இந்த சாதனையை அவரால் நிகழ்த்தவே முடியவில்லை. ரஜத் பட்டிதார் வந்த பிற... மேலும் பார்க்க