80-ல் நுழைந்த ப.சிதம்பரம், நளினி சிதம்பரம்; கார்த்தி சிதம்பரம் தந்த ஸ்பெஷல் பரி...
Serial Update: கம்ருதீனுக்குக் கதை ரெடி; 'சட்'டுன்னு காணாமப்போன சந்தோஷம், முடிவுக்கு வரும் சீரியல்
இவ்ளோ தூரம் ஓடியதே வெற்றிதான்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆனந்த ராகம்' தொடர் கிளைமேக்ஸை நெருங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
சன் டிவியில் பிற்பகலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'ஆனந்த ராகம்'. ஆரம்பத்தில் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்து வந்த அழகப்பன் இந்தத் தொடர் மூலம் ஹீரோ ஆனார்.
சில தினங்களூக்கு முன் தொடர் ஆயிரமாவது எபிசோடைத் தொட்டது. அப்போது அழகப்பனிடம் பேசியிருந்தோம்.

'சின்னச் சின்னக் காமெடி கேரக்டர்கள்ல நடிச்சிட்டிருந்தவனுக்கு திடீர்னு ஹீரோ சான்ஸ் கிடைச்சிருக்குனு நினைச்சிட வேண்டாம். இந்த இடத்துக்கு வர்றதுக்கு பல கஷ்டங்களை அனுபவிச்சிருக்கேன். எப்படியோ மக்கள் என்னையும் ஏத்துக்கிட்டாங்க.
முன்னணி சேனல்ல நடிச்ச முதல் சீரியலே ஆயிரம் எபிசோடைத் தாண்டியதே என்னைப் பொறுத்தவரை பெரிய விஷயம்தான்' என அப்போது உற்சாகமாகப் பேசியிருந்தார்.
ஆனால் சட்டுனு அந்த சந்தோஷத்தை விரட்டுவது போலொரு தகவல் தற்போது வந்திருக்கிறது. தொடரை நிறைவு செய்திட முடிவெடுத்துள்ளார்களாம். வரும் ஜனவரி மாதம் தொடர் நிறைவடையுமெனத் தெரிய வருகிறது.
கதை ரெடி, ஷூட்டிங் போகலாமா?
பிக்பாஸ் சீசன் 9 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு எழுபது நாட்களைத் தாண்டி விளையாடி வருகிறார் கமருதீன்.
சக போட்டியாளர்களுடன் சண்டை, வாக்குவாதம் என நிகழ்ச்சிக்கு கன்டென்ட் தருபவராக இருக்கும் இவருக்கென ஒரு டீம் வெளியில் இயங்குவதாகச் சொல்கிறார்கள்.
எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தாலும் ஒவ்வொரு வாரமும் தப்பித்து வருவதன் ரகசியம் இதுதான் என்கிறார்கள் அவர்கள்.
தற்போது சிலர் இவருக்காகவே சில கதைகளை எடுத்துக்கொண்டு திரைப்படத் தயாரிப்பாளர்களை அணுகி வருகிறார்களாம்.

'பிக்பாஸ்ல எப்படியும் டைட்டில் அடிப்பார். ஒருவேளை டைட்டில் இல்லாட்டி டாப் ஐந்து போட்டியாளர்கள்ல ஒருத்தரா நிச்சயம் வருவார். நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வந்ததுமே ஷூட்டிங் போயிடலாம். எல்லாம் ரெடி' என்கிற அவர்கள் இதுவரை நான்கைந்து தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லிவிட்டார்களாம்.
சில சீரியல்கள்லதான் அதுவும் சப்போர்ட்டிங் கேரக்டர்கள்லதான் நடிச்சிருக்கார். ஆனாலும் ஹீரோ என்றால் லக்கி மேன் தான் என்கிறார்கள் இன்னும் சிலர்.

















