’தேவதைக்குத் தந்தையாகியுள்ள பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்’ - வல்லமை பட இயக்குநர் நெகி...
Shriya Saran: ``யார் இந்த முட்டாள்?" - ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா; என்ன நடந்தது?
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரன். ஷ்ரியா ஆண்ட்ரி கோஷீ என்பவரைத் திருமணம் செய்துகொண்டதற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இந்தத் தம்பதிக்கு ராதா என்ற மகள் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா சரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று, ஸ்ரேயா போலவே அவருக்கு நெருக்கமானவர்களின் பேசிவருவதாகவும், அவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``இந்த முட்டாள் யார்? தயவுசெய்து இப்படி போலியாக மெசேஜ் செய்து நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள்! மக்களின் நேரத்தை வீணடிப்பதில் நான் வருத்தப்படுகிறேன். இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமானது.
இந்த எண் என்னுடையது அல்ல. இந்த நபர் என்னைப் போல, என்னுடன் பணி செய்ய விரும்பும் நபர்களிடம் பேசுகிறார். இப்படியான செயல்களில் உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? ஆள்மாறாட்டக்காரராக இல்லாமல், ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்குங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















