செய்திகள் :

SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்!

post image

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று - மேற்கு வங்கம்.

இந்தத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

SIR
SIR
மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள மனுவின் முக்கிய சாராம்சங்கள்...

> மம்தாவின் மனு அரசியல் சாசனம் பிரிவு 32-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் உரிமையைக் குறிப்பிடுகிறது.

> இந்த ஆண்டு நடக்க உள்ள மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தான் நடக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடக்க கூடாது.

> எஸ்.ஐ.ஆர் நடைமுறையின் போது, வாக்காளர் அட்டையில் உள்ள சின்னச் சின்ன எழுத்துப் பிழைகளுக்கு எல்லாம் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுக்கக்கூடாது.

> Suo Moto அடிப்படையில், ஆவணங்களில் உள்ள தகவலின் படி, இந்த எழுத்துப்பிழைகள் தானாகச் சரி செய்யப்பட வேண்டும்.

> அங்கீகரிக்கப்பட்ட துறைகளால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

'வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி

அடிப்படையில், மம்தா பானர்ஜி ஒரு வழக்கறிஞர். அவர் 2003-ம் ஆண்டு வரை, வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதன் பின் தான், தீவிர அரசியலில் களமிறங்கினார்.

இதை வைத்து, எஸ்.ஐ.ஆர் வழக்கில் தனக்கு வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கேட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

'மேற்கு வங்கத்தின் முதல்வராகவும், திரிணாமுல் காங்கிரஸின் தலைவராகவும் வழக்கு சம்பந்தமான தகவல்களும், நீதிமன்ற நடைமுறைகளும் நன்கு தெரியும்' என்பது தான் மம்தா கோரிக்கையின் முக்கிய அம்சம்.

இதற்கான விசாரணை இன்று மதியம் 1 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விசாரணையை இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் பஞ்சோலி அமர்வு விசாரிக்க உள்ளது.

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி - போலீஸில் புகார்!

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்... மேலும் பார்க்க

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க