செய்திகள் :

US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்'' - ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?

post image

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

`இந்தக் கருத்து முரண்பாடானது (hypocritical), வெளிநாட்டவர்மீது வெறுப்பை கக்கும் (xenophobic) பேச்சு' என அரசியல் விமர்சகர்கள் சாடியுள்ளனர்.

பலர், வான்ஸின் மனைவி உஷா இந்தியக் குடியேறிகளின் மகள் என்பதைக் குறிப்பிட்டு, “அவரை (உஷா) இந்தியாவுக்கே திருப்பி அனுப்புங்கள்!” என்று வலியுறுத்தியுள்ளனர்.

trump - Vance
trump - Vance

அதிகப்படியான குடியேற்றத்தால் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பறிபோகின்றன என்று குற்றம் சாட்டி, வான்ஸ் தனது ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.

அவர் கூறும் கருத்துக்கு எதிரான பொருளாதார ஆய்வுகள் அனைத்தும் ‘பழைய அமைப்பின் மூலம் பணக்காரர்களானவர்கள்’ நிதியில் நடத்தப்பட்டவை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

வான்ஸ் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான வஜாஹத் அலி, “நீங்கள் உஷாவையும், அவரது இந்தியக் குடும்பத்தையும், உங்கள் இரு இனக் குழந்தைகளையும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்” என்று கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

Wajahat Ali Post
Wajahat Ali Post

இந்த கடுமையான தாக்குதலுக்கு முன்னதாக வான்ஸ் பேசிய சில கருத்துகளும் காரணமாக அமைந்தன. “அமெரிக்கர்கள் தங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஒத்த இனம், மொழி அல்லது தோல் நிறத்தைப் கொண்டிருப்பதை விரும்புவது முற்றிலும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதும்” என்று அவர் பேசியிருந்தார்.

உஷாவைக் குறிவைக்க என்ன காரணம்?

சில நாட்களுக்கு முன்னர் டர்னிங் பாயிண்ட் யு.எஸ்.ஏ அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய வான்ஸ், தனது மனைவி உஷா ஒருநாள் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக்கொள்வார் என நம்புவதாகத் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜே.டி.வான்ஸ், உஷா வான்ஸ்
ஜே.டி.வான்ஸ், உஷா வான்ஸ்

பின்னர், உஷாவுக்கு “மதம் மாறும் திட்டம் இல்லை” என்றும், அவரது நம்பிக்கைகளை தான் மதிப்பதாகவும் தெளிவுபடுத்தி, சர்ச்சையை தவிர்க்க முயன்றார்.

ட்ரம்ப் நிர்வாகம் குடியேற்றவாதிகளுக்கு எதிரான சட்டங்களை பலமடங்கு கடுமையாக்கி வரும் சூழலில், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவியைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.

ரூ.10200000000 `ஓராண்டு பட்ஜெட்டே போடலாம்; திமுக ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணுவது உறுதி" - எடப்பாடி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைக் கவனித்து வரும் திமுக மூத்த அமைச்சர் கே.என். நேரு, தனது துறையில் ரூ. 1,020 கோடி வரையில் ஊழல் செய்திருப்பதாகவும், வழக்குப் பதிவு செய்யவும் தமிழக தலைம... மேலும் பார்க்க

"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" - எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் வரவிருக்கும் 'டொனால்ட் ட்ரம்ப் சாலை' - ரேவந்த் ரெட்டி முடிவுக்கு பாஜக எதிர்ப்பு!

'தெலங்கானா ரைசிங் குளோபல் உச்சி மாநாட்டிற்கு' (Telangana Rising Global Summit) முன்னதாக, உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் நோக்கில், அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சாலைக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை உடைக்க சதி - கொந்தளிக்கும் கு.பாரதி

அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் ஊழல் நடப்பதாக பாஜகவின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் புகார் கொடுத்திருந்தார்.கராத்தே திய... மேலும் பார்க்க

TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறார். கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதல் முறையாக புதுச்சேரிக்கு செல்கிறார். ஏற்கனவே டிசம்பர் 5 ஆம் தேதி அங்கே கூட்டம் நடத்துவதாக இருந்... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை நாமே தகர்க்கிறோமா? - மருவும் மக்களாட்சி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க