"என் முதல் கார், நண்பன் கொடுத்த பரிசு" - கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்...
US: `சல்மான் கானைக் கொலை செய்ய முயன்ற அன்மோல் பிஷ்னோய்' - இன்று இந்தியாவுக்கு நாடு கடத்தல்
அமெரிக்காவிலிருந்து புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை அவரவர் நாட்டிற்கு கட்டாயமாக நாடு கடத்துவது வழக்கமாக நடைபெறுகிறது.
இதற்கு முன்பு, நூற்றுக்கணக்கானோர் இந்தியாவுக்குக் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், தற்போது மேலும் இருநூறு பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குக் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 197 பேர் போதிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் ஆவார்கள்.
மேலும், இந்தியாவில் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் படுகொலை செய்யப்பட்டார்.

நடிகர் சல்மான் கான் வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் சல்மான் கானைக் கொலை செய்ய முயன்றது உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட அன்மோல் பிஷ்னோய் அவர்களோடு சேர்ந்து இந்தியாவுக்குக் நாடு கடத்தப்படுகிறார். அவர் குஜராத்தில் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் அவர்களின் சகோதரர் ஆவர்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவில், குறிப்பாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் கொலை, பணம் பறித்தல் மற்றும் பல்வேறு குற்றங்களில் அன்மோல் பிஷ்னோய் ஈடுபட்டு வந்தார்.
2022 ஆம் ஆண்டு, பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். சித்து மூஸ்வாலா படுகொலையிலும் அன்மோல் பிஷ்னோய்க்கு முக்கிய பங்கு உள்ளது.

அன்மோல் கைது
ரஷ்ய ஆவணங்களை பயன்படுத்தி, அமெரிக்கா மற்றும் கனடா இடையே தொடர்ந்து பயணம் செய்து வந்தார். இந்தியா வழங்கிய தகவலின் அடிப்படையில், அன்மோல் பிஷ்னோயின் நடமாட்டத்தை கண்டறிந்து அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்ட அன்மோல் பிஷ்னோய் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, ஜி.பி.எஸ் சாதனம் மூலம் அவரது நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பு
ஜி.பி.எஸ் சாதனம் அன்மோல் பிஷ்னோயின் உடலில் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அதனை எளிதில் அகற்ற முடியாது. ஜாமீனில், வீட்டுக்காவலில் அல்லது பரோலில் உள்ளவர்களை அமெரிக்க அரசு இவ்வாறு கண்காணிக்கும் நடைமுறை உள்ளது. அன்மோல் பிஷ்னோய் மட்டுமல்லாமல், பஞ்சாப்பை சேர்ந்த இரண்டு கிரிமினல்களும் அதே விமானத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவில் இருந்து விமானம் இந்தியாவிற்காக கிளம்பி விட்டது.

இன்று டெல்லி வருகை
அந்த விமானம் இன்று காலை 10 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து அன்மோல் நாடு கடத்தப்பட்டதை கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மகன் ஜீசான் சித்திக் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அரசு இதுபற்றி அவருக்கு மெயில் அனுப்பியதாகவும், அன்மோல் பிஷ்னோய் டெல்லியில் இறங்கியவுடன் மத்திய அரசு கைது செய்ய வேண்டும் என்றும் ஜீசான் சித்திக் தெரிவித்துள்ளார்.
மும்பை போலீஸார் அன்மோல் பிஷ்னோயை இந்தியாவிற்கு நாடு கடத்தவேண்டும் என்று இரண்டு முறை அமெரிக்காவிற்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அவன் இந்தியாவிற்கு வந்தவுடன், எந்த விசாரணை ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். அன்மோல் பிஷ்னோய் கனடாவிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரது கைது மற்றும் நாடு கடத்தல் பல முக்கிய வழக்குகளில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அன்மோல் மீது மும்பை, டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.





















