ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா: போயஸ் கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள் | Photo ...
'கள்ள ஓட்டில் வென்றவர்கள் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார்கள்' - வானதி சீனிவாசன்
கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சட்டமன்றத் தேர்தலுக்காக மகளிரணியை தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பாஜக மகளிரணி மாநில மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திராவிட மாடல் பெண்களுக்கு துரோகம் செய்யும் அரசாக உள்ளது. இதனை வீடு வீடாக எடுத்து செல்லும் பணியை செய்வோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு பெரியளவு இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இந்து மத வழிபாட்டு உரிமைகளை மதிக்க வேண்டுமா.. இல்லையா.
இந்து சமய அறநிலையத்துறை தான் பிரச்னை செய்கிறது. கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கேட்டால், பணம் கொடுங்கள் அப்போது தான் நடத்த முடியும் என்று அதிகாரிகள் சொல்லும் நிலை நிலவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. நல்லுறவு நீடிக்கிறது. இட ஒதுக்கீடு முறையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அதனால் அந்த விவகாரத்தில் அவர் உறுதியாக இருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதற்றமாக உள்ளார். கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்துமே எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்க்கிறார்கள்.” என்றார்.


















