INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்; சாய், பண்ட் அரைசதம்! - முதல் நாளில் இ...
"அதிமுக-வுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார்; அதிமுகவை பற்றி பேச..!"- கே.பி முனுசாமி பதில்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் த.வெ.கவில் இன்று இணைந்திருக்கின்றனர்.
இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, " ஒட்டுமொத்த அதிமுகவும், அதன் தொண்டர்களும் த.வெ.கவில்தான் இருக்கிறார்கள். 2026ல் த.வெ.கவின் வெற்றி அதிமுக தொண்டர்களின் வாக்குகள் இல்லாமல் கிடைத்திருக்காது. அந்த மரியாதையும் அன்பும் எங்களுக்கு இருக்கிறது" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கே.பி முனுசாமி ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்திருக்கிறார். " பதவி சுகம் அனுபவித்தவர்கள் த.வெ.கவில் இணைந்திருக்கின்றனர். அப்படி இணையும்போது ஆதவ் அர்ஜுனா அதிமுக குறித்து தான்தோன்றிதனமாக கருத்துக்களை பதிய வைத்திருக்கிறார்.
அவருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறேன். எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஓடுகிறார். திமுகவிற்கு சென்றார் அங்கு வாய்ப்பில்லை. அதேபோல விசிகவிற்கு சென்றார் அங்கும் வாய்ப்பில்லை. பிறகு அதிமுகவுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார். ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை.
இறுதியாக த.வெ.கவிற்கு சென்றார். தேர்தல் வந்தது, வாய்ப்பு கிடைத்தது அமைச்சரானார். அதோடு அவர் நின்றுவிட வேண்டும். மற்ற கட்சிகளுடைய வரலாற்றையோ, வளர்ச்சியையோ மதிப்பிடாமல் தான்தோன்றிதனமாக பேசுவதை கண்டிக்கிறேன்.
அதிமுகவை பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை. இதோடு அவர் நிறுத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் போராட்டத்தை முன்எடுப்பேன். பேப்பரில் தான் எடப்பாடி பொதுச்செயலாளர் என்கிறார்.

நாவடக்கம் வேண்டும் ஆதவ் அர்ஜுனா அவர்களே! அவரை பற்றி பேச உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. கட்சி மாறியவர்கள் எல்லாம் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள். தமக்கு அடையாளம் காண்பித்த இயக்கத்தை, சமூகத்தில் அந்தஸ்தை கொடுத்த இயக்கத்தை விட்டுச் சென்றவர்களை வரவேற்பதோடு ஆதவ் அர்ஜுனா நிறுத்திக்கொள்ள வேண்டும். உங்களுடைய லாட்டரி வேலை எல்லாம் இங்கு வைத்துகொள்ள வேண்டாம்" என்று கே.பி முனுசாமி ஆதவ் அர்ஜுனாவை சாடியிருக்கிறார்.












