Delhi Blast: நாடு முழுவதும் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி -NIA வ...
``அன்னைக்கு 150 ரூபாய் கொடுக்க என் கிட்ட காசு இல்ல''-மிடில் கிளாஸ் அனுபவம் குறித்து சந்தோஷ் நாராயணன்
நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’.
கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
நவம்பர் 21-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (நவ.11) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சந்தோஷ் நாராயணன் தன்னுடைய மிடில் க்ளாஸ் அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்.
" ஒரு முறை எனக்கு பெங்களூரில் வேலை செய்ய வாய்ப்பு வந்தது. முதல் முறையாக வேலைக்காக நான் விமானத்தில் பயணம் செய்தேன்.
5000 ரூபாய் செலவானது. நான் சீடி கவரில் சில்லறை காசு சேர்த்து வைத்திருப்பேன்.
அந்த காசை எடுத்துவிட்டால் எக்னாமிக் டிசாஸ்டர் வந்துவிட்டது என்று அர்த்தம்.
அந்த காசை எல்லாம் எடுத்துக்கொண்டு தான் நான் பெங்களூர் சென்றேன். திரும்பி வரும்போது என்னிடம் 150 ரூபாய் தான் இருந்தது.
விமானத்தில் பயணித்தப்போது குழுக்கள் முறையில் டிவி வின் பண்ணிவிட்டேன்.
அதற்கு டேக்ஸ் மட்டும் 300 ரூபாய் கட்டச்சொன்னார்கள். ஆனால் என் பர்ஸை தொலைத்துவிட்டேன் என்று பொய்சொல்லி என்னிடம் இருந்த 150 ரூபாயை எடுத்துக்கொடுத்தேன்.
அதன்பிறகு மீதி 150 ரூபாயை அவர்களே போட்டு டிவியை அனுப்பி இருக்கிறார்கள்.
ஆனால் அந்த டிவி எனக்கு வரவே இல்லை. ஏனென்றால் அந்த கொரியருக்கு என்னால் பணம் கொடுக்க முடியவில்லை.

அந்த சமயத்தில் என்னிடம் போனில் ரீசார்ஜூம் இல்லை. வாழ்க்கையில் ஒரு சைக்கிள் ஆஃப் நத்திங்னஸ் இருக்கும்.
அது அப்படியே சென்றுகொண்டுதான் இருந்தது. சென்னைக்கு வந்து எக்கனாமிக்காக நாம் படும் கஷ்டமெல்லாம் நாமே தேடிக்கொள்வதுதான்.
ஆனால் நாம் செய்யும் முயற்சி என்றைக்காவது ஒருநாள் பலனளிக்கும். எனக்கு பிடித்ததை செய்தேன்.
அதற்கு கிடைத்த மதிப்பு தான் இவை அனைத்தும். ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன்" என்று பகிர்ந்திருக்கிறார்.





















