செய்திகள் :

`ஆசிரியையின் ரூ.74 லட்ச சம்பளம்; திரும்ப செலுத்த சொன்ன கல்வித்துறை' - ரத்து செய்த உயர் நீதிமன்றம்

post image

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு அரூரிலுள்ள அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரியிலுள்ள தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

பள்ளிக் கல்வித்துறை

இந்நிலையில் ஆசிரியை மார்கரெட் விமலி சமர்பித்த மதிப்பீட்டு சான்றிதழ் தவறானது எனக்கூறி 2012 -ஆம் ஆண்டு இடை நீக்கம் செய்ததுடன், அதுவரை அவர் பெற்ற சம்பளம் ரூ.25 லட்சத்தை திருப்பி செலுத்த வேண்டுமென்றும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியை மார்கரெட் விமலி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளூபடி செய்தார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'மனுதாரர் பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் அவரது சான்றிதழ்களை சரி பார்த்து இருக்க வேண்டும். அப்படியின்றி 12 ஆண்டுகள் கழித்து பணியிடை நீக்கம் செய்தது தவறானது' என்று தெரிவித்து, பணியிடை நீக்கத்தையும் குற்றவியல் நடவடிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றம்

இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு இதே காரணங்களுக்காக தணிக்கையில் ஆட்சேபம் இருப்பதாகக் கூறி, ஆசிரியை மார்கரெட் விமலி கடந்த 25 ஆண்டுகளாக பெற்ற சம்பளம் ரூ. 74 லட்சத்தை திருப்பி செலுத்தும்படி கிருஷ்ணகிரி வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மார்கரெட் விமலி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர, நீதிபதி தண்டபாணி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித்துறை தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி,

'இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டே உயர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் அதே காரணத்தைக் கூறி, வழங்கிய சம்பளத்தை திருப்பி செலுத்த வேண்டும் எனக் கோர முடியாது. எனவே மனுதாரரிடமிருந்து ரூ 74 லட்சத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் அவருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 12 மாத சம்பளத்தை 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

பள்ளிக் கல்வித்துறைக்கு எதிரான இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SIR : ``விதிமுறைகளுக்கு உட்பட்டு..!" - உச்ச நீதிமன்றத்தில் `வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி | Live Updates

உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு..! மம்தா பானர்ஜிமேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிரான விவகாரத்தில் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32 கீழ் பொது... மேலும் பார்க்க

தென்பெண்ணையாறு நீர்ப்பங்கீடு; 'ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்' - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தென்பெண்ணையாறு நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்ப்பாயத்தை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச ... மேலும் பார்க்க

UGC : `இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால்.. புதிய UGC சட்டத்துக்கு இடைக்காலத் தடை!' - உச்ச நீதிமன்றம்

கல்வி நிலையங்களில், குறிப்பாக கல்லூரிகளில் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் பாகுபாடுகள் அதிகரித்திருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக,... மேலும் பார்க்க

`ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை' - மதுரை மாவட்ட நீதிமன்றம்

ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரையில் உள்ள அலங்காநல்... மேலும் பார்க்க

`நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு; தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?' - உச்ச நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி, ராம ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறிப்பி... மேலும் பார்க்க

ஜனநாயகன்: `ராணுவ சின்னங்கள், மத நல்லிணக்கத்துக்கு ஊறு..!' - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள்!

விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது.ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த... மேலும் பார்க்க