தூத்துக்குடியில் 'டொர்னடோ' சுழல் காற்று எப்படி ஏற்பட்டது? நிலத்தியல் துறை பேராசி...
ஆபாசப் பட மோகம்; 9 மாதக் குழந்தையைக் கடத்திப் பாலியல் கொடுமைசெய்த 12 வயது சிறுவன் - உ.பி அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகில் குலாரிஹா என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 9 மாத மகளை தங்களது அருகில் படுக்க வைத்துவிட்டு உறங்கினர். அதிகாலை 2 மணிக்கு எழுந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இரவோடு இரவாக அவர்கள் வசித்த கிராமம் முழுக்க குழந்தையைத் தேடினர். இறுதியில் அக்குழந்தை வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் ரத்தப்போக்குடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து இது குறித்து விசாரணை நடத்தினர். போலீஸார் முதலில் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினர். இறுதியில் குழந்தையின் வீட்டிற்கு 3 நாள்களுக்கு முன்பு சண்டிகரில் இருந்து 12 வயது உறவுக்கார சிறுவன் வந்திருந்தான். அவனிடம் விசாரித்தபோது ஆரம்பத்தில் மழுப்பலாக பதிலளித்தான். ஆனால் தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டான்.
இது குறித்து போலீஸ் அதிகாரி நிமேஷ் பாட்டீல் கூறுகையில், ''சிறுவன் இரவு நேரத்தில் மது அருந்தி இருக்கிறான். அதனை தொடர்ந்து தனது மொபைல் போனில் ஆபாச படங்களை பார்த்து இருக்கிறான். அவனது மொபைல் போனை சோதித்து பார்த்தபோது 100 ஆபாச இணையதளங்கள், 50 வீடியோக்களை பார்த்திருந்தது தெரிய வந்தது. ஆபாச வீடியோ பார்த்தபிறகு வீட்டில் தனது பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த 9 மாத சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அவனை காவலில் எடுத்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.





















