செய்திகள் :

ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங்கிரஸ் கேள்வியும்

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொலை செய்யப்பட்டதற்காக மே 7-ம் தேதி இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் தாக்குதலைத் தொடங்கியது.

இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மே 10 அன்று போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

இந்தப் போர் நிறுத்தத்துக்குப் பின்னணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையீடு இருக்கிறது என அமெரிக்காவும், பாகிஸ்தானும் தொடர்ந்து பேசிவரும் நிலையில், இந்தியா அதை மறுத்து வருகிறது.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

இந்த நிலையில், ``மே 7 முதல் 10 வரை இந்தியாவுடனான நான்கு நாள் மோதலில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மேலும் இரண்டு தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையேயான நான்கு நாள் இராணுவ மோதல்களைப் பயன்படுத்தி சீனா தனது ஆயுதங்களின் நுட்பத்தை சோதித்துப் பார்த்து விளம்பரப்படுத்தியிருக்கிறது." என அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் (USCC) தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிக்கை இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில், `` அந்த அறிக்கையில், 'அமெரிக்க அரசின் இந்த அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது.

மேலும், அந்த அறிக்கையில் பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களை 'கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்' என விவரித்திருக்கிறது. நான்கு நாள் மோதலில் ‘இந்தியா மீது பாகிஸ்தானின் இராணுவ வெற்றி’ எனக் குறிப்பிடப்படுகிறது.

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

இந்த அறிக்கை வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு, சவுதி பட்டத்து இளவரசர் கலந்து கொண்ட அமெரிக்க-சவுதி அரேபிய மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 61வது முறையாக, `இந்தியா மீது 350% வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியே ஆபரேஷன் சிந்தூரை முடிவுக்குக் கொண்டுவந்தேன்' எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியோ 'ஷெரீஃப் எனக்கு போன் செய்தார்’ எனத் தெரிவித்தார். இந்த அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையும், அதிபர் ட்ரம்பின் இந்த தொடர் கருத்தும் இந்தியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதற்கு பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறையும் தங்கள் ஆட்சேபனைகளையும், எதிர்ப்பையும் பதிவு செய்வார்களா? நமது ராஜதந்திரம் மற்றொரு கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக, அதிமுக-வுக்கு பிடிகொடுக்காத பிரேமலதா - தேமுதிக-வின் அடுத்த அரசியல் நகர்வு என்ன?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற்றிருந்தது. விருதுநகரில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனப் பெரிதும் நம்பிய பிரேமலதாவுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சி... மேலும் பார்க்க

``உதயநிதி அப்செட்; செல்வப்பெருந்தகை ஆப்சென்ட்'' - வைரலாகும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு

இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மெல்லத் தொடங்குகிறது. இதற்கிடையில், திமுக காங்கிரஸ் கூட்டணி நீண்டகாலமாக எழுதப்படாத விதியாகவே தொடர்ந்து ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: மராத்தி பேசாதவருக்கு ரயிலில் அடி, உதை; உயிரை மாய்த்துக்கொண்ட கல்லூரி மாணவர்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ரயிலில் சென்றபோது மொழி விவகாரத்தில் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்ட 19 வயது கல்லூரி மாணவர், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வியாழக்கிழமை (நவ. 20) காவல்துறையினர் தெரிவித்துள்ளன... மேலும் பார்க்க

மதுரை: ``மெட்ரோவைத் தொடர்ந்து ஆசியான் ஒப்பந்தத்தில் விமான நிலையமும் புறக்கணிப்பா?'' - சு.வெங்கடேசன்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை விமான நிலையத்தை சிங்கப்பூர், மலேசியா உள்ளடக்கிய ஏழு ஆசியான் நாடுகளுடன் சுற்றுலா மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த... மேலும் பார்க்க