செய்திகள் :

`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்

post image

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.

எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது.

 எப்ஸ்டீன் - ட்ரம்ப்
எப்ஸ்டீன் - ட்ரம்ப்

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.

அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.

சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பேசுபொருளாகி இருக்கின்றன.

இந்நிலையில் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரம் குறித்து NPR என்ற ஊடகத்திற்கு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அதில், "எப்ஸ்டீன் ஃபைல்ஸில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எனக்கு நம்பமுடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெலிண்டா கேட்ஸ்
மெலிண்டா கேட்ஸ்

இதில் தொடர்புடைய பில் கேட்ஸ் உட்பட அனைவரும் இது குறித்து எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.

எந்த சிறுமிக்கும் ஏற்படவே கூடாத ஓர் அவல நிலை, எஃப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளிகளால் ஏற்பட்டிருக்கிறது.

என் மகள் வயதில் இருக்கும் அச்சிறுமிகளை பார்க்கும்போது இதயம் நொறுங்கிப் போனது" என்று தெரிவித்திருக்கிறார்.

'இந்த' செய்கைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தான் - நீதிமன்றம் தீர்ப்பு

இன்னும் பலருக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கான வரையறைகள் என்னவென்று தெரிவதில்லை. ஒரு பெண்ணிடம் ஆபாசமாகப் பேசினாலோ, தவறாக நடந்துகொண்டாலோ தான் பாலியல் தொந்தரவுகள் என்று நினைக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில்... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: பிரேக் அப்பில் முடிந்த இன்ஸ்டா காதல்; போனை பிளாக் செய்த காதலனை குத்திக் கொன்ற காதலி

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஷ்பூர் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் காம்தா பிரசாத்(25). அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.பிரசாத்திற்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரோஷ்னி(22) என்ற பெண்ணின் அறிமுகம் ... மேலும் பார்க்க

தேயிலை தோட்டத்தில் கிழிந்த உடைகள்; வனத்தில் உடல் பாகங்கள் - கோத்தகிரியை உறைய வைத்த பழங்குடி மரணம்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கூவக்கரை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான வெள்ளியங்கிரி. கூலித்தொழிலாளியான இவர் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்திர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: தேர்தலில் போட்டியிட தடையாக இருந்த 6 வயது மகளை கொன்ற கொடூர தந்தை - என்ன நடந்தது?

மகாராஷ்டிராவில் வரும் 5-ம் தேதி பஞ்சாயத்து மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட வேண்டியிட விரும்புபவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: காணிக்கைப் பணத்தில் கைவைத்த சிவபக்தை; கோயிலில் தொடரும் உண்டியல் திருட்டு

காசிக்கு நிகரான புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் வந்து செல்கின்றனர்.விழா காலங்கள் ... மேலும் பார்க்க

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - இறப்பதற்கு முன்பு செய்த `செயல்!'

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேடு, தம்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (48). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த... மேலும் பார்க்க