செய்திகள் :

இளம் பெண் பாலியல் வன்கொடுமை; சிக்கிய மூவர் - சென்னை அரசு கல்லூரி கேன்டீனில் நடந்த கொடூரம்

post image

சென்னையில் அரசு கல்லூரி ஒன்றின் வளாகத்தில் கோட்டூரை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக கேன்டீன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் செல்வம் நடத்தி வரும் கேன்டீனில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில் இருபது நாட்களாக இளம்பெண் வேலை பார்த்து வரும் நிலையில் நேற்று புதிதாக புதுக்கோட்டையை சேர்ந்த குணசேகர்(57) என்பவர் அதே கேன்டீனில் மாஸ்டர் வேலைக்கு பணிக்கு சேர்ந்துள்ளார். பணிக்கு சேர்ந்த முதல் நாளே மாஸ்டர் குணசேகர் கேன்டீனில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணை கல்லூரி வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு செய்ததாக தெரிகிறது.

பாலியல் வன்கொடுமை

இதனால் பாதிக்கப்பட்ட பெண் கத்தி கூச்சலிடவே, அங்கிருந்த சிலர் இளம்பெண்ணை மீட்டு குணசேகரை பிடித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாஸ்டர் குணசேகரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் பெண்கள் - குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் முன்பு கவுன்சிலிங்காக ஆஜர்படுத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் ஏற்கனவே அவருக்கு திருமணமாகி கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு திருமணமான இரண்டே மாதத்தில் கணவரை பிரிந்து கும்பகோணத்திற்கு சென்று தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

பின்னர் அங்கிருந்து சென்னை வந்த இளம்பெண் 20 நாட்களுக்கு முன்பு செல்வம் கேன்டீனில் பணிக்கு சேர்ந்ததும் அப்போது கேண்டீன் உரிமையாளர் செல்வம் பெண்ணிடம் ஆசையாக பேசி தனது வலையில் விழ வைத்து பாலியல் வன்கொடுமைக்கு செய்தது விசாரணையில் தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அதுமட்டுமின்றி கேண்டீன் உரிமையாளர் செல்வத்தின் நண்பர் கார்த்திக் என்பவரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவர்களை தொடர்ந்து மாஸ்டர் குணசேகர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சைதாப்பேட்டை போலீஸார் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேண்டீன் உரிமையாளர் செல்வம், அவரது நண்பர் கார்த்திக், கேண்டீன் ஊழியர் குணசேகர் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் ‌.

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க