செய்திகள் :

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு: ``உண்மைக்கு புறம்பான செய்தி" - உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்

post image

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் அருண் ராஜ் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அந்தப் பதிவில், ``உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும் (state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும். கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவாரா?

நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை (cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா?

2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி. ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது.

 அருண் ராஜ் - விஜய்
அருண் ராஜ் - விஜய்

ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு.

எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் அரசின் நிலைப்பாடு என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்... மேலும் பார்க்க

Pocso சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க ‘சிங்கப்பெண் விழிப்புணர்வு’ முகாம்! - உயர் நீதிமன்ற உத்தரவு

திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை போக்சோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்ககுளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலரும் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிப... மேலும் பார்க்க

`வங்கிகளில் மக்கள் பணம் வைக்கும் விதத்தில் மாற்றம் ; RBI தங்கத்தை விற்கிறதா?' - அறிக்கை சொல்வதென்ன?

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புளூம்பெர்க் ஊடகம், தனது பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தாவின் ஆய்வை மேற்கோள்காட்டி ஒரு செய்தியை வெளியிட்டது. அதன்படி, மே 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில், இந்திய... மேலும் பார்க்க

அழைப்பு விடுத்த ஸ்டாலின்... திமுகவில் இணையும் விசிக பனையூர் பாபு?

'ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளையை தத்தெடுத்துக் கொண்டாரா திருமாவளவன்?' என விஜய் அமைச்சரவைக்கு வி.சி.க சென்றதை விமர்சித்து, அக்கட்சியிலிருந்து விலகிய ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.... மேலும் பார்க்க

`இந்திய வீடுகளில் உறங்கும் 35,000 டன் தங்கம்' - மோடி சொல்லும் `மறுசுழற்சி'; மாறுகிறதா மக்கள் மனநிலை?

இந்திய வீடுகளின் லாக்கர்களிலும், பீரோக்களிலும், கோயில் கருவறைகளிலும் சுமார் 35,000 டன் தங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு கற்பனைக்கு எட்டாதது; சுமார் 3.8 டிரில்லியன் டாலர்கள்! இது நாட்டின் ... மேலும் பார்க்க

விஜய்யின் பத்திரிகையாளர் தவிர்ப்பு யுக்தி எப்படி உருவாக்கப்பட்டது? - களத்திலிருந்து ஓர் அலசல்!

முதல்வர் விஜய் அரசுமுறை பயணமாக கடந்த வாரம் டெல்லிக்கு சென்று வந்திருக்கிறார். பிரதமர் மோடியையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்திருக்கிறார். இந்தப் பயணத்தில் முதல்வர் பத்திரிகையாளர்களை சந்... மேலும் பார்க்க