டார்கெட் Greenland: "நான் முந்தவில்லை என்றால் சீனாவும், ரஷ்யாவும்.!" - ட்ரம்ப் எ...
எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தி்த்து பேசியிருக்கிறார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அரசியல் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அண்மையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயினார் - எடப்பாடி சந்திப்பில், தினகரனை கூட்டணியில் இணைப்பது குறித்தும், அவருக்கான இடங்களையும் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தினகரனும் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

















