``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அன...
``என் கணவர் எந்தப் பழக்கத்துக்கும் அடிமையாகவில்லை; ஆனால் அணியினர்.!" - ஜடேஜா மனைவி ரிவாபா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. முதல்முறையாக 2009-ல் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜடேஜா, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் ஆடியிருக்கிறார்.
2024-ல் டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஜடேஜா, தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடி வருகிறார்.

இவரின் மனைவி ரிவாபா ஜடேஜா, 2019-ல் பா.ஜ.க-வில் இணைந்து, 2022-ல் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றார்.
அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத் பா.ஜ.க அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றத்தில், ரிவாபா ஜடேஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ரிவாபா ஜடேஜா, தனது கணவர் எந்தவொரு பழக்கத்துக்கும் அடிமையாகவில்லை என்றும், ஆனால் அவருடன் அணியிலிருப்பவர்கள் சில பழக்கங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ரிவாபா ஜடேஜா, ``என் கணவர் ஜடேஜா கிரிக்கெட் விளையாட லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்குச் செல்கிறார்.
இருப்பினும் இதுநாள் வரையில், எந்த வகையான பழக்கத்தும் அவர் அடிமையாகவில்லை. எந்தவொரு தீய பழக்கங்களில் ஈடுபட்டதில்லை. ஏனென்றால் அவர் தனது பொறுப்புகளைப் புரிந்துகொள்கிறார்.
ஆனால், அணியில் இருக்கும் மற்றவர்கள் சில தீய பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை.

12 ஆண்டுகளாக என் கணவர் வீட்டை விட்டு வெளியே இருக்கிறார். அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால், தான் என்ன செய்ய வேண்டும், தனது கடமை என்ன என்பதை அவர் புரிந்துகொள்கிறார்" என்று கூறினார்.
ரிவாபா ஜடேஜாவின் இத்தகைய கருத்தானது, `அவர் தன் கணவரைப் பற்றி பெருமையாகப் பேசலாம், அதற்காக மற்ற வீரர்களை இப்படிப் பொதுப்படையாகப் பேசுவது ஏற்புடையதல்ல' என்று சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.









.jpg)










