சென்னை: புதிதாக கட்டப்பட்டுள்ள விடற்றோருக்கான இரவு நேர காப்பகம் – திறந்து வைத்த ...
என் சம்பளம் குடும்பத்துக்கு... என் எதிர்காலத்துக்கு நான் என்ன சேர்த்து வைத்திருக்கிறேன்?
காலை எட்டு மணி. சமையலறையில் குக்கர் விசிலடிக்கும் சத்தம். ஒரு கையில் காபி, மறு கையில் லேப்டாப் பேக். அவசரமாகப் பிள்ளைக்கு டிபன் பாக்ஸை மூடிவிட்டு, ஆட்டோவைப் பிடிக்க ஓடும் அந்தப் பெண்ணை நமக்குத் தெரிந்திருக்கும்... ஒருவேளை அது நீங்களாகவும் இருக்கலாம்...
இன்றைய பெண்கள்... எவ்வளவு சாமர்த்தியசாலிகள்! வீட்டை நிர்வகிக்கிறார்கள், அலுவலகத்தில் சாதிக்கிறார்கள், குடும்பத்தின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். ஆனாலும், ஒரு சின்ன விஷயம் மட்டும் நம் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் ஒரு தோழியைச் சந்தித்தேன். கை நிறைய சம்பளம் வாங்கும் ஐடி உத்தியோகஸ்தர். "உன் சேமிப்பெல்லாம் எப்படிம்மா இருக்கு?" என்று கேட்டேன். அவர் அலட்சியமாகத் தோளைக் குலுக்கினார் "எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க... எல்லாமே அவர்தான் (கணவர்) பார்த்துப்பார். நான் சம்பளத்தை அவர் அக்கவுண்ட்டுக்கு மாத்திடுவேன்," என்றார்.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
சமையலில் உப்பு சரியானதா என்று பார்க்கத் தெரிந்த நமக்கு, உடுத்தும் புடவை தரமானதா என்று பார்த்து வாங்கும் நமக்கு, நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணம் எங்கே போகிறது, எப்படி வளர்கிறது என்று தெரிந்துகொள்ள ஏன் இத்தனை தயக்கம்?
புள்ளிவிவரங்கள் சொல்வதைக் கேட்டால், இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களில் 67 சதவிகிதம் பேர், தங்கள் பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்களிடமே விட்டுவிடுகிறார்களாம்.

இது நம்பிக்கையா? அல்லது பயமா?
"நமக்கு இதெல்லாம் வராது... தப்பா போயிடுமோ" என்கிற ஒருவித தாழ்வு மனப்பான்மை நமக்குள் ஆழமாக வேரூன்றி இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆனால் தோழிகளே, வாழ்க்கை என்பது ஒரு நேர்க்கோடு இல்லை. திடீரென ஒரு திருப்பம் வந்தால்... கடவுள் ஏதோ ஒரு சோதனையை வைத்தால்... அப்போது "நம்ம கையில என்ன இருக்கு?" என்று தேடினால், வெறும் நகைப் பெட்டியைத் தவிர வேறெதுவும் இருப்பதில்லை.
நகை, நிச்சயம் ஒரு பாதுகாப்புதான். மறுக்கவில்லை. ஆனால், அது ஒரு ஊமைச் சொத்து. அது உங்களிடம் பேசாது. உங்களுக்கு மாதாமாதம் சம்பளம் தராது. சீட்டுப் பணம்? அதுவும் அப்படித்தான். கைக்கு வந்த வேகத்தில் கரைந்துவிடும்.
நமக்குத் தேவை, ஒரு தோழியைப் போலக் கூடவே வரும் பாதுகாப்பு. நாம் வேலைக்குப் போகாத நாட்களிலும், நமக்காக உழைக்கும் ஒரு பணம். அதைத்தான் 'இரண்டாவது வருமானம்' என்கிறார்கள்.
இங்கேதான் 'மியூச்சுவல் ஃபண்ட்' என்கிற விஷயத்தை நாம் உற்றுநோக்க வேண்டும். இது ஏதோ ஆண்களுக்கான விஷயமோ, அல்லது பெரிய பணக்காரர்களுக்கான சூதாட்டமோ இல்லை. இது ஒரு கூட்டு முயற்சி.

சிறுகச் சிறுக, ஒரு உண்டியலில் சேர்ப்பது போல, மாதம் ஒரு தொகையை இதில் போட்டு வந்தால்... அது வளர்ந்து, பெருகி, ஒரு காலத்தில் உங்களுக்கு நிழல் தரும் ஆலமரம்போல நிற்கும். அதிலிருந்து 'SWP' என்கிற முறையில், நாம் விரும்பும் பணத்தை மாதந்தோறும் எடுத்துக்கொள்ளலாம். நினைத்துப் பாருங்கள்... ஐம்பது வயதில், யாருடைய கைகளையும் எதிர்பார்க்காமல், நம் சொந்தப் பணத்தில் தலைநிமிர்ந்து வாழ்வது எவ்வளவு பெரிய கெளரவம்!
"எனக்குச் சொல்லித்தர யாரும் இல்லையே" என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அந்தத் தயக்கத்தை உடைக்கத்தான் ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.
மக்களின் நிதிச் சுதந்திரத்துக்காகவே இயங்கும் ‘லாபம்’ அமைப்பு, பெண்களுக்காக ஒரு முக்கியமான இணைய வழிச் சந்திப்பை (Online Workshop) நடத்துகிறது.

தலைப்பு: தங்கம் & சீட்டுக்கு அப்பால்: பெண்கள் ‘இரண்டாவது வருமானம்’ உருவாக்குவது எப்படி?
நாள்: டிசம்பர் 24, 2025 (புதன்கிழமை)
நேரம்: மாலை 7:00 மணி
பேச்சாளர்: உமா கல்யாணம், நிதி ஆலோசகர் & இணை நிறுவனர், யு & கே ஃபினான்சியல் கன்சல்டன்ட்
இவர், ஒரு சகோதரியைப் போல, மிக எளிமையாக உங்களுக்கு வழிகாட்ட இருக்கிறார். முதலீட்டின் அரிச்சுவடி தெரியாதவர் கூடப் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்கிறார்கள்.
பெண்ணே... உன் பலம் உனக்குத் தெரியவில்லை. குடும்பத்துக்காகவே வாழ்ந்தது போதும். உனக்காக, உன் எதிர்காலத்துக்காக, ஒரு மணி நேரம் ஒதுக்கு.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் இல்லை. ஆனால், இது உங்கள் வாழ்க்கைப் பார்வையை மாற்றக்கூடும்.
கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.
https://labham.money/webinar-dec-24-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_dec24_2025
தலைநிமிர்ந்து வாழ்வோம்! வாருங்கள்.



















