செய்திகள் :

ஏலம், பரிசு, சம்பளம், ஆட்ட நாயகன்... IPL 2026-ல் வைபவ் சூரியவன்ஷி சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

post image

ஐபிஎல் 2026 தொடர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கோப்பைக் கனவை இரண்டாவது முறையாக நிறைவேற்றியிருந்தாலும், இந்தத் தொடரின் உண்மையான நாயகனாக ஜொலித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷிதான்.

கடந்த சீசனுக்கு முந்தைய மெகா ஏலத்தில் வெறும் ரூ. 1.10 கோடிக்கு வாங்கப்பட்ட இந்த இளம் வீரர், இந்த ஒரே சீசனில் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

வைபவ் சூரியவன்ஷி
வைபவ் சூரியவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகக் குறைந்த விலையில் கிடைத்த ஒரு பொக்கிஷமாக வைபவ் சூர்யவன்ஷி நிரூபித்துள்ளார். இந்த சீசனில் அவருடைய சம்பளம் (retainer) ரூ. 1.10 கோடியாக இருந்தாலும், அவருடைய உண்மையான வருமானம் அதைவிடப் பன்மடங்கு அதிகம்.

தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், மொத்தம் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியைத் தட்டிச் சென்றார். மைதானத்தில் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த இவரது ஆட்டம், ராஜஸ்தான் அணிக்கு பெரும் பலமாக அமைந்தது. இருப்பினும், இவரது தனிப்பட்ட சாதனை அணிக்குக் கோப்பையைப் பெற்றுத் தரவில்லை; ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறத் தவறியது.

பரிசு மழையில் நனைந்த இளம் வீரர்!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், வைபவ் சூர்யவன்ஷி மீது விருதுகளும், பரிசுமழையும் பொழிந்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்ற கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இந்த இளம் வீரர் பலரது கவனத்தை ஈர்த்தார். அவர் வென்ற முக்கிய விருதுகளும், பரிசுத்தொகைகளும் இதோ:

தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் (MVP): ரூ. 15 லட்சம்

ஆரஞ்சு கேப் (அதிக ரன்கள்): ரூ. 10 லட்சம்

சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர்: ரூ. 10 லட்சம் மற்றும் டாடா சியரா கார்

சீசனின் சூப்பர் சிக்ஸர்கள்: ரூ. 10 லட்சம் (72 சிக்ஸர்களுக்காக)

வளர்ந்து வரும் வீரர்: ரூ. 10 லட்சம்

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

வருமானக் கணக்கு இதுதான்!

அவருடைய ஆண்டு சம்பளமான ரூ. 1.10 கோடி மற்றும் விருதுகள் மூலம் கிடைத்த ரூ. 55 லட்சத்துடன் அவரது வருமானம் நின்றுவிடவில்லை. இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய 16 போட்டிகளுக்கும் தனித்தனியாக போட்டி ஊதியம் பெற்றுள்ளார்.

ஒரு போட்டிக்கு ரூ. 7.5 லட்சம் வீதம், போட்டி ஊதியமாக மட்டுமே அவர் ரூ. 1.20 கோடி ஈட்டியுள்ளார். இது தவிர, தொடரின்போது பலமுறை ஆட்டநாயகன் விருது, எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் போன்ற விருதுகளையும் வென்றார். இந்த ஒவ்வொரு விருதுக்கும் தலா ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. அனைத்தையும் சேர்த்தால், ஐபிஎல் 2026 சீசனில் மட்டும் வைபவ் சூர்யவன்ஷியின் மொத்த வருமானம் ரூ. 2.50 கோடியைத் தாண்டியுள்ளது. இது தவிர ரசிகர்களின் மனங்களையும் வென்றிருக்கிறார் இந்த சுட்டி குழந்தை. ஆனால் அது மதிப்பிட முடியாதது. !

'10 வயதில் சதம்' - அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் உலகமே தற்போது இளம் புயலான வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே சூர்யவன்ஷி குடும்பத்தில் இருந்து இன்னொரு கிரிக்கெட் சூறாவளி உருவாகிவி... மேலும் பார்க்க

"தென்னாப்பிரிக்க அணியில் இப்படிப்பட்ட ஓர் இளம் வீரர் இல்லை.!" - சூர்யவன்ஷியை புகழ்ந்த டேல் ஸ்டேயின்

தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டேயின் இந்திய இளம் வீரர் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி,... மேலும் பார்க்க

'நியூசிலாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது..!'- ஓய்வை அறிவித்த கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஓய்வு குறித்து பேசியிருக்கும் கேன் வில்லியம்சன், " சர்வதேச கிரிக்கெட்... மேலும் பார்க்க

"எல்லா அழுத்தங்களிலும் RCB ஆதரவு தந்திருக்கிறது; இதுதான் என் வீடு" - விராட் கோலி நெகிழ்ச்சி

'ஈசாலா கப் நம்தே' என்ற வாசகத்தோடு கடந்த 17 வருடங்களாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் தனது முதல் கோப்பையை முத்தமிட்டிருந்தது. இதனைத்தொடர... மேலும் பார்க்க

நள்ளிரவு விதி! மீண்டும் சர்ச்சையில் பென் ஸ்டோக்ஸ் - நைட் கிளப் தகராறால் பறிபோகுமா பதவி?

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அணி வெற்றி பெற்றதைக் கொண்டாட, சக வீரர் கஸ் அட்கின்ச... மேலும் பார்க்க

Manav Suthar: `ஸ்லோ விக்கெட்... சிம்பிள் பிளான்!' - பந்துவீச்சு ரகசியம் பகிரும் `அறிமுக' ஆட்ட நாயகன்

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது... தனது முதல் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதர். டெஸ்ட் கிரிக்கெட் சுலபமானதா என்ற கேள்விக்க... மேலும் பார்க்க