செய்திகள் :

ஒடிசா டு திருப்பூர்; AC பெட்டியில் வந்த 30 கிலோ கஞ்சா; துப்பாக்கியுடன் 4 பேர் கைதான பின்னணி என்ன?

post image

திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை சோதனைச்சாவடி பகுதியில் கஞ்சா கடத்திச் செல்வதாக பல்லடம் காவல்நிலைய ஆய்வாளருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.

இதன் அடிப்படையில் குழுவாகச் சென்ற காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். வடமாநில இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ஒடிசாவிலிருந்து ரயிலில் ஏ.சி கம்பார்ட்மென்ட் மூலம் கஞ்சா பார்சல்கள் வந்துக் கொண்டிருப்பதாக உண்மையைக் கூறியுள்ளனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

திருப்பூர் ரயில் நிலையம் சென்ற காவல்துறையினர், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஏ.சி‌ பெட்டியில் 30 கிலோ கஞ்சா பார்சல்கள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்கள் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக ஒடிசாவைச் சேர்ந்த மிர்துன்ஜெயா ரானா (26), ​நிரோட் பாக் (24), பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார் (28),​சூர்யகாந்த் தாஸ் (25) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அநாகரிகம்; போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை!

சென்னை வேளச்சேரி ஒரண்டியம்மன் கோயில் தெருவில் கணவருடன் இளம்பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த ஒருவர், இளம்பெண்ணுக்கு சொல்ல முடியாத அளவுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்துவிட்டு தப்பிச் செ... மேலும் பார்க்க

மொட்டை அடித்தால் ரூ.15,000; நூதனமாக ஏமாற்றிய கும்பல்; நம்பி தலைமுடியை இழந்த பெண்கள் - விநோத சம்பவம்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள புதுகொத்தாம்பாடியைச் சேர்ந்த பெண்கள் சிலருக்கு நேற்று முன்தினம் இரவு புது எண்களில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. தாசில்தார் அலுவலகத்தில் இருந்து அழைப்பதாகவும், வ... மேலும் பார்க்க

கடலூர்: காதலிக்க மறுத்த மாணவியைக் கத்தியால் குத்திய கொடூரம்; பயத்தில் இளைஞர் எடுத்த முடிவு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவர், பக்கத்து கிராமத்தில் ஒரு வீட்டுக்கு ஒயரிங் வேலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்த வீட்டில் ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: விபத்து வழக்கில் காரை விடுவிக்க லஞ்சம்; கையும் களவுமாகப் பிடிபட்ட எஸ்.எஸ்.ஐ கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர், கடந்த 19-ம் தேதி தனது காரில் காவலூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காவலூர் பகுதியைச் சேர்ந்த லட்... மேலும் பார்க்க

"கணவன் என்னை விவாகரத்தே செய்தாலும் அந்தப் பையன்தான் வேணும்" - மனைவி பிடிவாதம்; கணவன் விபரீத முடிவு

சண்டிகரைச் சேர்ந்த மோனு என்பவர் 8 ஆண்டுகளாக கோமல் என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். எட்டு ஆண்டுக்குப் பிறகு இரு குடும்பத்தின் சம்மதத்தின் பேரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் ... மேலும் பார்க்க

Uttar Pradesh: பேண்டில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்; அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த ஆசிரியை

உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசி அருகில் உள்ள பண்டேபூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் கேசரி குமார் என்பவரின் 5 வயது மகன் படித்து வந்தான். அவன் வகுப்பறையில் இருக்கும்போது சிறுநீர் கழிக்க வாஷ்ரூம் ச... மேலும் பார்க்க