செய்திகள் :

கப்பலில் 250 நாள்கள் பணி: மன அழுத்தத்தில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயலும் அமெரிக்க படைவீரர்கள்?

post image

கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்கா தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பே அமெரிக்க போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது போர் நடக்கவில்லை என்றாலும் ஈரானுக்கு எதிரான நொருளாதார நெருக்கடியை அதிகரிக்க ஈரானுக்குள் அல்லது ஈரானில் இருந்து எந்த கப்பலும் வெளியில் செல்ல முடியாதபடி அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன. இதனால் அமெரிக்க கடற்படை வீரர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமலும், குடும்பத்தினரைப் பார்க்க முடியாமலும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

கடலில் 250 நாள்கள்

குறிப்பாக ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் கடந்த 9 மாதங்களாக வளைகுடா பகுதியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. அது தொடர்ச்சியாக 250 நாள்கள் கரைக்கு வராமல் தொடர்ந்து கடலில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அக்கப்பலில் சுமார் 5,000 மாலுமிகள் மற்றும் கடற்படையினர் இருக்கின்றனர். தொடர்ச்சியாக கடலில் தங்குவதும் அவர்களுக்கு மிகவும் மோசமாக அமைந்துள்ளது.

இதனால் யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் இருக்கும் மாலுமிகள் கடலில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

அவர்கள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இதையடுத்து மாலுமிகளின் குடும்பத்தினரும் மிகவும் கவலை அடைந்துள்ளனர். சான் டியாகோவில் உள்ள ஒரு ஹாலில், சுமார் 200 குடும்ப உறுப்பினர்கள் விமானம் தாங்கி கப்பலில் அதிகரித்து வரும் நெருக்கடி குறித்து மூத்த கடற்படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பெண் கடற்படையின் செயலாளரான ஹங் காவோவிடம், தன்னுடைய கணவர் அனுப்பி இருக்கும் செய்தியில், ``நாளை நான் எழுந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டு இருப்பதாக தெரிவித்தார். ஒரு காலத்தில் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்பங்களுக்கு இருந்த நம்பிக்கையை கடற்படைத் தலைமை அழித்துவிட்டதாக மற்றொரு மாலுமியின் குடும்ப உறுப்பினர் குற்றம் சாட்டினார்.

அன்னாபெல் லோமா என்ற பெண் இது குறித்து கூறுகையில், ``எனது கணவர் பலமுறை பணியமர்த்தப்பட்டதை அடுத்து கடலில் குதிக்க முயன்றார். அவர் சோர்வாகவும், தன்னால் சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடுமோ என்று பயமாகவும் இருப்பதாகக் கூறினார். அவர் வேலை போய்விடுமோ என்று பயப்படுகிறார்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு மாலுமியின் மனைவி கூறுகையில், தனது கணவர் சக பணியாளர் ஒருவர் கடலில் குதிப்பதைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறினார்.

ஆபிரகாம் லிங்கன் கடந்த நவம்பர் 21ம் தேதி சான் டியாகோவிலிருந்து புறப்பட்டது. முதலில் பசிபிக் நோக்கிச் சென்றது. ஆனால் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு, கப்பல் மத்திய கிழக்குக்கு திருப்பி விடப்பட்டது. அன்றிலிருந்து கப்பலில் இருக்கும் மாலுமிகள் குறைந்த நேரமே கரைக்கு வந்துள்ளனர். 5,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் மற்றும் கடற்படையினர் இரண்டு நாள்கள் மட்டுமே தரையிறங்கியுள்ளனர்.

டிசம்பரில் குவாமில் ஒரு நிறுத்தமும் ஜூலையில் ஓமானில் மற்றொரு நிறுத்தமும் நிகழ்ந்துள்ளது. ஆரம்பத்தில் மே மாதத்தில் இக்கப்பலின் பணி முடிவடையும் என்று கூறப்பட்டது. மாறாக, போர் தொடர்வதால் அது பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் இக்கப்பல் 5வது மாதமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கப்பல் பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடைந்த கழிப்பறைகள், வாரக்கணக்கில் துணி துவைத்தல், வெந்நீர் இல்லாமை, அரை கப் அரிசி மற்றும் இரண்டு டார்ட்டிலாக்கள் என உணவு பற்றாக்குறை, சோப்பு, டியோடரன்ட் அல்லது டூத்பேஸ்ட் பற்றாக்குறையும் நிலவுகிறது என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மைக் லெவின் குறிப்பிட்டுள்ளார். இதனால் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு நெருக்கடி முற்றி வருகிறது.

மும்பையில் உணவு கட்டுப்பாட்டு விதிகளை மீறிய டோமினோஸ் பிட்சா... சீல் வைத்த அதிகாரிகள்

மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கமிஷனராக இருக்கும் துகாராம் முண்டே என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மாநிலம் முழுவதும் பால் கலப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். தற்போது மாநிலம் முழுவதும் உள... மேலும் பார்க்க

`ஈரான் தாக்கலாம்' - துருக்கியிலிருந்து உணவு லாரியில் பதுங்கி விமானநிலையம் சென்ற அதிபர் ட்ரம்ப்?

கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வந்தன. கடந்த மாதம் இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் ஈரான் மீது தாக்கியது. ஈரா... மேலும் பார்க்க

தனியாக 4 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தந்தை; முதியோர் இல்லத்தில் இறந்தபோது பார்க்கவராத பிள்ளைகள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த கன்ஷ்யாம் என்பவர் தனது மனைவி இளம் வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்ட நிலையில் தனியாக வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளைப் போராடி வளர்... மேலும் பார்க்க

`இந்தியாவிலேயே அதிக விலை' டெல்லியில் ரூ.271 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய தொழிலதிபர் மானவ் சர்தானா

டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள குருகிராம் பகுதியில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பங்களாக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ... மேலும் பார்க்க

குடும்பத்துக்கு பயந்து ரூ.5 லட்சத்தை புதைத்து வைத்த விவசாயி - அரித்து சேதப்படுத்திய கரையான்கள்

பொதுவாக பண்டைய காலத்தில் தங்கம் போன்ற உலோகங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க பூமிக்கு அடியில் புதைத்து வைப்பது வழக்கம். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் லோத்ரா மாவட்டத்தில், விவசாயி ஒருவர் தனது பணத்தை தன... மேலும் பார்க்க

`குழந்தை பெறுவதற்கு மட்டுமா பெண்கள்?' மறுமணம் தவிர்த்து சொந்தகாலில் நிற்க போராடும் இளம் கைம்பெண்கள்

மகாராஷ்டிராவின் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேற்கு விதர்பாவில் 2001 மற்றும் 2024 க்கு இடையில் அகோலா, அமராவ... மேலும் பார்க்க