செய்திகள் :

``கருப்பா இருக்காருன்னு எங்க திருமணத் தருணத்தில் கேலி'' - ட்ரோல் செய்யப்பட்ட புதுமண தம்பதி வேதனை

post image

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரிஷப் ராஜ்புத் என்பவர் சோனாலி சௌக்சே என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான சில வாரங்களிலேயே வைரலானது.

பலரும் ரிஷப்பின் கருமையான தோல் நிறத்தைக் குறிப்பிட்டு கேலி செய்தும், சோனாலி பணத்திற்காகவும் தான் ரிஷப்பைத் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்த விமர்சனங்கள் குறித்து பிபிசி ஊடகத்திற்குப் பேட்டியளித்த இந்தத் தம்பதி, தங்களின் வேதனையையும் விளக்கத்தையும் பகிர்ந்துள்ளனர்.

Indian couple trolled over skin colour

"நாங்கள் 2014ஆம் ஆண்டு கல்லூரியில் ஒன்றாக படித்தபோது சந்தித்தோம். இது வெறும் 30 வினாடி வீடியோவைப் பார்த்து உருவான பந்தம் அல்ல, 11 ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய காதல் உறவு. தங்கள் திருமணத் தருணம் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

சமூக வலைதளங்களில் என் குடும்பத்தையும் சேர்த்துத் தாக்கிப் பேசியது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. யாருக்கும் இன்னொருவரின் குடும்பத்தைக் காயப்படுத்த உரிமையில்லை" என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார்.

விமர்சனங்களுக்குப் பதிலளித்த சோனாலி, "என்னை 'கோல்ட் டிக்கர்' என்று அழைப்பதும், என் கணவரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுவதும் எனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் பலருக்கும் வெவ்வேறு தோல் நிறங்கள் உள்ளன.

ஆனால் இன்னும் வெள்ளையாக இருப்பதுதான் சிறந்தது என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. ஒருவரை அவரின் நிறத்தை வைத்து மட்டும் நல்லவர், கெட்டவர் என்று மதிப்பிடுவது நியாயமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.​ இந்த தம்பதியின் புகைப்படங்கள் கடந்த ஒரு வாரமாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் கடைசிநேர திருமண ரத்து; ஒரே ஆண்டில் ரூ.45 கோடி இழப்பு- ம.பி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த 40 நாட்களில் 150 திருமணங்கள் கடைசி நேரத்தில் நின்று போய் இருக்கிறது என்றும் இதில் பெரும்பாலான திருமணங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்த வந்த பதிவுகளால்தான் ரத்தா... மேலும் பார்க்க

ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா: போயஸ் கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள் | Photo Album

ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழாரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா மேலும் பார்க்க

``என் தந்தை 3 அடி, நான் 2 அடி'' - மூன்று முறை போராடி பேராசிரியர் வேலையை பெற்ற குஜராத் பெண்

ஊனம் ஒரு தடையில்லை என்று கருதி எத்தனையோ பேர் சாதித்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் குஜராத்தைச் சேர்ந்த, வெறும் 2 அடி உயரம் உள்ள ஒரு பெண் சாதித்து இருக்கிறார். குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் வி... மேலும் பார்க்க

Europe: விந்தணு தானம் செய்தவருக்கு கேன்சர் மரபணு; 197 குழந்தைகளின் நிலை என்ன?

உலகம் முழுக்க குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருவதால், அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகளும் முன்னேறிக்கொண்டே வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் விந்தணு தானம். வெளிநாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வரும் இந... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ரகசிய திருமணம்; பிரிட்டன் குடும்பத்தோடு தொடர்புடைய பூஜா தியோல் யார்?

சமீபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல், இடையிலே பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் சமீபகாலமாக அதிகமான படங்களில் நடித்து வருகிறார். சன்னி தியோல் 1983ஆம் ஆண்டு பாலிவுட்... மேலும் பார்க்க

'தி காட்பாதர்' முதல் 'பாட்ஷா' வரை! - இந்தாண்டு சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள படங்கள்

சென்னை சர்வதேச திரைப்பட விழா நாளை முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்திய மொழி திரைப்படங்கள் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களும் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளன. அத்தோடு இந்த... மேலும் பார்க்க