செய்திகள் :

கிருஷ்ணகிரி : தோட்டத்திற்குச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி; உடற்கல்வி ஆசிரியர் கைது!

post image

தோட்டத்திற்கு சென்ற பெண்ணை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

சமீபகாலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பெண்கள், குழந்தைகள் வக்கிரம் பிடித்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும், கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்தான் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 45 வயதடைய பெண், மாடுகளை கட்டுவதற்காக தன் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு மது போதையில் வந்த ஓசூர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தை இயேசு என்பவர், அபெண்ணின் முன் தன் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண், அங்கிருந்து செல்ல முயன்றபோது அவர் கையை பிடித்து இழுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் பதறிய அப்பெண் தன்னை காப்பாற்றும்படி கதறியுள்ளார்.

கைது
கைது

அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு உடற்கல்வி ஆசிரியர் குழந்தை இயேசுவை தாக்கியுள்ளனர். பின்பு அஞ்செட்டி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து அங்கு வந்த காவல்துறையினரிடம் ஆசிரியரை ஒப்படைத்தனர்.

பின்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் குழந்தை இயேசுவை காவல்துறை கைது செய்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

ஓட்டு வீடு, பெண் ஒருவர் கதறி கொண்டு இருக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்பகலில் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிக் கொண்டிருந்தனர். மேற்கூறையில் ஓட்டை உடைத்து நொறுக்குகின்றனர். `அடப்பாவிகளா ஏண்... மேலும் பார்க்க

`என்னை போகவிடு' கெஞ்சிய கடற்படை அதிகாரியின் மனைவி; பாலியல் வன்கொடுமை; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அய்யாஸ் தாஜ்(26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கண... மேலும் பார்க்க

சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் - பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி என்பவர் தொடர்பு கொண்டு, எங்களிடம் 4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக் காசை கொடுப்போம் என கூறி... மேலும் பார்க்க

கோவை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சாட்சி விசாரணை 24ஆம் தேதி முதல் துவக்கம்

கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய... மேலும் பார்க்க

`நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்

மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். அதன் பின் செய்தியாளார்களை சந்தித்து பேசிய இளம்பெண்,... மேலும் பார்க்க

வேலூர்: சிறுவன் இறப்பில் விலகிய மர்மம்; அடித்துக்கொன்ற கொடூர அத்தை; பகீர் கிளப்பும் `படுபாதக’ செயல்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ஆஷா. இவர்களின் 6 வயது மகன் முகிலன். கடந்த 5 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழ்ந்துவந்த ராஜ... மேலும் பார்க்க