திருப்பரங்குன்றம்: ``தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான்'' - ஓய்வு பெற்ற வட்ட...
கீழக்கரையில் கொடூர விபத்து: நகர்மன்ற தலைவர் கார் மோதி ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பலி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று அதிகாலை ஐயப்பப் பக்தர்கள் பயணம் செய்த கார்மீது கீழக்கரை நகர்மன்றத் தலைவரின் சொகுசு கார் அதிவேகத்தில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து ஐயப்பப் பக்தர்கள் ஸ்வாமி தரிசனத்திற்காக ராமேஸ்வரம் நோக்கி காரில் பயணம் செய்து கொண்டு இருந்தனர். இவர்களின் வாகனம் கீழக்கரை–மதுரை விலக்கு ரோடு அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கீழக்கரை நகர்மன்றத் தலைவரின் சொகுசு கார் மோதியது.

கார் மோதிய வேகத்தில் ஐயப்பப் பக்தர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி நொறுங்கியது. அப்பளம் போல சிதைந்த வாகனத்தில் பயணித்த 4 ஐயப்பப் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கீழக்கரை நகர்மன்றத் தலைவரின் சொகுசு காரின் ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவம் அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் போலீஸார் இணைந்து உடல்களை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் சிக்கிய ஒரு ஐயப்பப் பக்தரும் கீழக்கரை வாலிபரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.















