செய்திகள் :

குடிநீர்க் குழாய் சரிசெய்ய சென்றவர் புலிக்கு இரையான சோகம்; கை, கால்கள் தனித்தனியாக கிடந்த அதிர்ச்சி

post image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி பாலகிருஷ்ணன். வீட்டின் அருகில் உள்ள குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராத காரணத்தால் அதனைச் சீரமைப்பதற்காக தனியார் காபி தோட்டத்தை ஒட்டிய பகுதிக்கு நேற்று மாலை சென்றிருக்கிறார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு‌ தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து இன்று காலை வரை தேடி வந்த நிலையில், அருகில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் பாலகிருஷ்ணனின் கால், கை என உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் தனித்தனியாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதைக் கண்டுப் பதறிய மக்கள், அவரை புலி தாக்கிக் கொன்றுதடன், அவரின் உடல் பாகங்களையும் புலி தின்றிருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.

புலி தாக்குதல் சம்பவம்
புலி தாக்குதல் சம்பவம்

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், வனத்துறையின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடலை உறவினர்களுக்குக் காட்டாமல், அவசர அவசரமாக அனுப்பி வைத்ததாக உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மனித- வனவிலங்கு மோதலைத் தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், புலியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது போலீஸாரும் வனத்துறை அதிகாரிகளும் மக்களைச் சமாதானப்படுத்தி அப்பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து புலியைப் பிடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மைதானத்தில் திடீரென தாக்கிய மின்னல்; சுருண்டு விழுந்த வீரர் மரணம்... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

தாய்லாந்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது நடந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்... மேலும் பார்க்க

தஞ்சை: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது காஸ் வெடித்த விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவரது மனைவி செல்வி (41) இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டி... மேலும் பார்க்க

மழை வெள்ளத்தில் சென்ற கார்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய கணவர், இழுத்துச்செல்லப்பட்ட மனைவி, மகள்கள்

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. அஹில்யாநகர் மாவட்டத்தின் லோனி என்ற இடத்திற்கு அவினாஷ் என்பவர் தனது மனைவி ... மேலும் பார்க்க

மும்பை: 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் உள்ளே சிக்கி உயிரிழந்த சோகம்!

மும்பை அருகில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் 4 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கெனவே பீவாண்டி மாநகராட்சியால் ஆபாயகரமான கட்டடம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் ... மேலும் பார்க்க

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து; சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைத்தவர்கள் உட்பட 10 பேர் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவர் மனைவி செல்வி (41), இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம்; திறக்கப்பட்ட 16 நாள்களில் சேதம்; அதிர்ச்சியில் மக்கள்

வடமாநிலங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது அல்லது கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் இடிந்துவிழுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அது போன்ற ஒரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந... மேலும் பார்க்க