"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" - தேசிய விருதுகள் குறித்த...
கோவை: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் கொடுமை; திருடி விட்டு வரும் வழியில் 3 பேர் வெறிச்செயல்
கோவை ஒண்டிப்புதூர் அருகே வினித் என்கிற இளைஞர் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், தனியார் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் அந்த மாணவி, கோவை விமான நிலையம் பின்புறம் பகுதியில் வினித்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

வினித்தின் காரில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல், இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அவர்கள் காரை அடித்து நொறுக்கி, வினித்தை தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை தூக்கி சென்றனர். தொடர்ந்து மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். வினித் கொடுத்த தகவலின் பேரில் பீளமேடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அந்த மாணவி மற்றும் வினித்தை மீட்டனர். மாணவி தனியார் மருத்துவமனையிலும், வினித் கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுதொடர்பாக பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பியோடியவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டதில் 2 பேர் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதும், ஒருவர் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் கோவில்பாளையத்தில் ஒரு டிவிஎஸ் 50 வண்டியை திருடி வரும் வழியில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

















