செய்திகள் :

``'சம்பவக்காரன்' சசி; இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" - இயக்குநர் பாலா எழுதிய கடிதம்

post image

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் சசிகுமார் வென்றிருந்தார்.

இந்நிலையில் சசிகுமாரை பாராட்டி இயக்குநர் பாலா கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.

அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், " சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு நீ சிறந்த விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் வெளிப்பாடுதான் இந்தக் கடிதம்.

இயக்குநர் பாலா
இயக்குநர் பாலா

கடந்த 25 வருடங்களாக உன்னை பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன். பேராற்றல் கொண்டவன்.

கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன்.

பல ரசிகர்களில் நானும் ஒருவனாக.!

உன் இயல்பான எளிமைக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.

இறுதியாக, உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்தச் 'சம்பவக்காரன்' சசியை, என் இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சசிகுமார்
சசிகுமார்

என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன்” என்று பாராட்டி எழுதியிருக்கிறார்.

இந்த கடிதத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சசிகுமார், " தேசிய (விருது) அங்கீகாரம் தந்த பாலா அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி...

உங்கள் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார்.

`விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்'- கார்த்தி

நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை' சார்பாக ஆண்டுதோறும் உழவர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 7வது ஆண்டுக்கான 'உழவர் விருதுகள் 2026'கான விழா சென்னையில் நடைபெற்றது. விவச... மேலும் பார்க்க

Devi Sri Prasad: "ஒரு புதிய பயணம் தொடங்குகிறது" - நடிகராக அறிமுகமாகும் தேவி ஶ்ரீ பிரசாத்!

தமிழ், தெலுங்கு என இத்தனை வருடங்களாக இசையில் பெரும் ஹிட்களை அடுக்கியவர் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத். மியூசிக் என்பதைத் தாண்டி சில படங்களில் கேமியோ செய்து நடிகர்களுடன் நடனமும் அவர் ஆடியிருக்கிறார்.... மேலும் பார்க்க