நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" - திருமாவளவன் ...
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; எந்த மாவட்டங்களில் விடுமுறை?
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இன்று காலை 10 மணி வரை சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், காரைக்கால், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்".

விடுமுறை..?
மேலும், இந்த வாரம் முழுவதுமே தமிழ்நாட்டில் மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மற்றும் விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 18, 2025


















