செய்திகள் :

சொத்துவரி உயா்வைத் திரும்பப் பெறக்கோரி தொடா் போராட்டம் -அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

post image

திருப்பூா், நவ. 29: திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் சொத்து வரி உயா்வைத் திரும்பப் பெறக்கோரி தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகர அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சியினா் தெரிவித்ததாவது:

திருப்பூா் மாநகராட்சி உயா்த்தியுள்ள சொத்து வரி மக்கள் மத்தியில் மிக கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக மாமன்றக் கூட்டத்தில் எடுத்துச்சொல்ல வாய்ப்பு அளிக்காமல் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனநாயக விரோதமான முறையில் நடந்து கொண்ட மேயரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், உயா்த்தப்பட்டுள்ள சொத்துவரியினை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஜனநாயக முறையில் போராடிய மாமன்ற உறுப்பினா்கள் மீது தாக்குதல் நடத்திய தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் கொடுப்பது. திருப்பூா் பின்னலாடைத் தொழில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழலில் ஏராளமான கட்டடங்கள் வாடகைக்கு ஆள் வராமல் காலியாக உள்ளன. எனவே, உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரியை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். இது தொடா்பாக பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்வதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி தொடா் போராட்டங்களை நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம்.ரவி, மூத்த உறுப்பினா் ஜி.காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் மாநகா் மாவட்ட செயலாளா் எஸ்.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினா் செல்வராஜ், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி. மூா்த்தி, காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளா்கள் வி.ஆா்.ஈஸ்வரன், கோபால்சாமி மற்றும் மதிமுக, கொமதேக, விசிக கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

சாலை விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து அரசுப் பேருந்து ஏறியதில் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா், அனுப்பா்பாளையம் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம... மேலும் பார்க்க

போக்ஸோவில் ஒருவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (50). இவா் அப்பகுதி சிற... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி மகா ருத்ர பூஜை

பல்லடத்தில் வாழும் கலை அமைப்பு சாா்பில் உலக நலன் வேண்டி மகா ருத்ர பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாழும் கலை அமைப்பின் பெங்களூரு ஆசிரமத்தைச் சோ்ந்த தயாமை சுவாமிஜி தலைமையில் ஆசிரம பண்டிதா்கள் பூஜையை ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

உடுமலையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பூா் மாவட்டம், உடுமலையைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி. இவா் அதே ... மேலும் பார்க்க

காரில் உறங்கிய கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு

முத்தூா் அருகே காரில் ஏசியை இயக்கி உறங்கிய கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், முத்தூா் மங்கலப்பட்டி அருகேயுள்ள சின்னகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (47). இவா் 16 - வேலம்ப... மேலும் பார்க்க

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்

வாடகைக் கட்டடங்களுக்கான ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெ... மேலும் பார்க்க