கேரளா: உள்ளாட்சித் தேர்தலில் சீட் தர பா.ஜ.க மறுப்பு; உயிரை மாய்த்த ஆர்.எஸ்.எஸ் ச...
``ஜடேஜாதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர விரும்பினார்'' - RR உரிமையாளர் மனேஜ் படேல் பேட்டி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சாம் கரணை கொடுத்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
சிஎஸ்கேவின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அணி வீரார்களிடம் கலந்தாலோசனை நடத்தியே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறியிருக்கிறது.

இது சிஎஸ்கே ரசிகர்களிடயே வருத்ததை ஏற்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 12 ஆண்டுகள் விளையாடிய ஜடேஜாவிற்கு பிரியாவிடை கொடுப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் ஆரம்ப காலத்தில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஜடேஜா, “இது என் சொந்த வீட்டுக்குத் திரும்புவது மாதிரி தான். ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்கு முதல் வெற்றியைத் தந்த அணி. இப்போது மீண்டும் அந்த அணியில் சேர்வதில் மிகுந்த மகிழ்ச்சி!” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் தலைமை உரிமையாளர் மனோஜ் படேல், "4 வாரங்களுக்கு முன்பு அக்டோபர் மாதத்தில் ஜடேஜா என்னைத் தொடர்புகொண்டார். அவர் மீண்டும் தனது தாய் வீடான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்ப வருவது குறித்து யோசித்து வருவதாகக் கூறினார்.

அதன்பிறகுதான் அனைத்துமே நடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில்தான் அவர் தனது IPL வாழ்க்கையைத் தொடங்கினார். கடைசியாக 21 வயது இளம் வீரராக ஜடேஜாவைப் பார்த்தேன், தற்போது மீண்டும் அனுபவம் மிக்க இளம் வீரராக அவரை பார்ப்பதில் மகிழ்ச்சி" என்று கூறியிருக்கிறார்.




















