செய்திகள் :

டெல்லி ஹோட்டல் தீ விபத்து: 'மின்சாரத்தைத் துண்டித்ததால்...' - பல உயிர்களைக் குடித்த அலட்சியம்

post image

டெல்லியில் உள்ள மால்வியா நகரில் இருக்கும் ப்ளோரிஷ் இன் ஹோட்டலில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டு ஒன்பது இந்தியர்கள், 12 வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் விசாரணை நடத்தி வந்தனர். தீ விபத்தில் குருகிராமைச் சேர்ந்த அகர்வால் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.

இத்தீவிபத்து தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு நடத்திய விசாரணையில் ஹோட்டல் சமையல்காரர் கேசவ் நேகியின் அலட்சியத்தால்தான் ஹோட்டலில் தீ பரவியதாகவும், 21 பேர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் நேகியுடன் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டபோது, ​​கேசவ் நேகி தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து வெளியேறினார்.

சமையலறையில் இருந்த மின்சார அடுப்பை பற்ற வைத்தவுடன் அது வெடித்துச் சிதறிப் பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதாக அந்தச் சமையல்காரர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

தீ விபத்து
தீ விபத்து

தீப்பிடித்தவுடன், ஹோட்டலின் முதன்மை மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, அடர்ந்த புகைக்கு இடையே தான் வெளியே ஓடியதாகவும் அவர் கூறினார்.

மூடிய கதவு, வெளியில் வரமுடியாத வாடிக்கையாளர்கள்

அடுப்பு வெடித்ததைத் தொடர்ந்து நேகி மின்சாரத்தை அணைத்ததால் ஹோட்டலின் எலக்ட்ரானிக் கதவுகள் பூட்டப்பட்டது. அவை எதுவும் செயல்படவில்லை. இதன் காரணமாக பலர் அறைக்குள்ளேயே சிக்கிக்கொண்டது போலீஸ் விசாரணையில் இப்போது தெரியவந்துள்ளது.

ஹோட்டல் குளியலறையில் கதவைத் திறக்க முடியாததால் கணவன்-மனைவி இருவரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

நேகியின் அலட்சியச் செயலால் ஹோட்டலில் பலர் கதவைத் திறக்க முடியாமல் வெளியே வரமுடியவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் புகையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்திருந்தனர்.

மேலும், காவல்துறையினர் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அந்த இடத்துடன் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன்கிழமை காலை 8:30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிகள் கொண்ட ஹோட்டலில் 22 அறைகள், ஒரே ஒரு நுழைவு-வெளியேறும் இடம், நிரந்தரமாக சீல் செய்யப்பட்ட திறக்க முடியாத ஜன்னல்கள் மற்றும் சென்சார் மூலம் இயக்கப்படும் பிரதான கதவு ஆகியவற்றைக் கொண்டதாக இருந்தது.

இவையும் 21 பேர் உயிரிழப்பு மற்றும் தீவேகமாகப் பரவ முக்கிய காரணம் ஆகும். 2022ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தாக இது கருதப்படுகிறது.

சுட்டெரிக்கும் வெயில்... தீர்ந்த குடிநீர்: சஹாரா பாலைவனத்தில் 49 உயிர்களைக் குடித்த லாரி ரிப்பேர்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சஹாரா பாலைவனப் பகுதியில், பயணம் செய்த லாரி பழுதடைந்ததால் குடிக்கத் தண்ணீரின்றி தாகத்தால் தவித்து 49 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மாலி ... மேலும் பார்க்க

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: நள்ளிரவில் சூழ்ந்த தீ; 12 முதியவர்கள் பலி! - இயக்குநர் கைது!

மேற்கு இலங்கையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அங்குருவதோட்ட... மேலும் பார்க்க

பீகார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து: 4 நோயாளிகள் உயிரிழப்பு

டெல்லியில் நேற்று ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பீகார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பீகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 நோய... மேலும் பார்க்க

`அதிக நாள் இருக்க மாட்டார்' - மூத்தவருடன் நேரம் செலவிட வந்து, டெல்லி தீ விபத்தில் பலியான 8 பேர்

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள மால்வியா நகரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று திடீரென தீப்பிடித்துக்கொண்டதில் 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களில் அதிகமானோர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். இந்த தீவ... மேலும் பார்க்க

பள்ளிக்கரணையில் பயங்கர தீ: காவல்துறையினர் பறிமுதல் செய்த வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தீ விபத்து!

சென்னை பள்ளிக்கரணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எங்கு? பள்ளிக்கரணையில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது... மேலும் பார்க்க

ஹெலிகாப்டர் விபத்து: `6 மணி நேரம் என் மார்பில் கிடந்தார்'- திருமணமான சில மணி நேரத்தில் பலியான மணமகன்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணமகன் மற்றும் ஹெலிகாப்டர் பைலட் ஆகிய இருவர் பரிதாபமாக உய... மேலும் பார்க்க