"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி
டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்தவர் அணிந்திருந்த தங்கக் கைக்கடிகாரம் ஏலம்; எவ்வளவு தெரியுமா?
1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தனது முதல் பயணத்தை ஆயிரக்கணக்கான பயணிகளுடன் தொடங்கிய கப்பல் டைட்டானிக்.
பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே வட அட்லாண்டிக்கில் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தை மையப்படுத்தி, ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 'டைட்டானிக்' படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதனிடையே அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன.
அந்த வகையில் அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் 18 கேரட் தங்கக் கடிகாரம் ஒன்று இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டிருக்கிறது.
இந்தக் கடிகாரம் சுமார் ரூ.20.7 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப் பொருட்களில் விற்கப்பட்ட அதிகபட்ச ஏலத்தொகை ஆகும்.
இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியைத் தாண்டியதாக Hentry Aldridge and son ஏல நிறுவனம் தெரிவித்திருக்கிறது.



















