Jananayagan: 'பறக்கட்டும் நம்ம கொடி'- ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் தளபதி கச்...
திண்டுக்கல்: கொடை ரோடு அருகே ராட்சச இறக்கை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; எப்படி நிகழ்ந்தது?
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே மதுரை-திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடியில் இருந்து மகாராஷ்டிராவை நோக்கி இராட்சச காற்றாலை இறக்கையை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி சென்றுகொண்டிருந்தது.
அம்மையநாயக்கனூர் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெயனர் லாரி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த நேரத்தில் கண்டெய்னர் லாரியின் எதிரில் எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தினால் திண்டுக்கல்-மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அமையநாயக்கனூர் காவல்துறையினர் போக்குவரத்தைச் சரி செய்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
















