செய்திகள் :

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தார் சாலைகள் - மக்கள் நிம்மதி!

post image

திருப்பத்தூர் மாவட்டம், லண்டன் மிஷன் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த தார்சாலைகள் குறித்து, 11/10/2025 அன்று விகடனில், "சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும்போது அந்தத் திறந்த குழிகள் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தலாம்!" என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.

அச்செய்தியில், பாதுகாப்பு வேலி இல்லாமல் நடைபெற்றுக்கொண்டிருந்த கால்வாய் பணி மற்றும் அப்பகுதிச் சாலையின் பரிதாப நிலை விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து, தற்போது அரசு, அப்பகுதியில் தார்சாலை அமைத்துள்ளது.

பல ஆண்டுக்கால பிரச்னை

அப்பகுதியில் தார்சாலைகள் சேதமடைந்து, இடையிடையே உருவான குழிகள் மற்றும் பள்ளமேடுகளால் பொதுமக்கள் பல ஆண்டுகளாகத் தவித்து வந்தனர். குறிப்பாக, பள்ளி-கல்லூரி மாணவர்கள், காலை நேரப் பயணிகள், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் இது தினசரி எதிர்கொள்ள வேண்டிய அபாயமாக மாறியிருந்தது.

"இந்தத் திறந்த குழிகள் மற்றும் குண்டும் குழியுமான சாலைகள் எங்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்" என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாகக் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்தப் பிரச்னை குறித்து விகடன் தளத்தில் செய்தி வெளியானதும், அதற்கு மக்கள் ஆதரவும் கவனமும் கிடைத்தது. சமூக வலைதளங்களில் செய்தி பரவலாகப் பகிரப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, பின்வரும் பணிகளைத் தொடங்கி நிறைவேற்றி வருகிறது:

சேதமடைந்த தார்சாலைகளை முழுமையாக அகற்றி புதிதாக லேயர் அமைத்தல்

ஆழமான குழிகளை மூடுதல்

கழிவுநீர் கால்வாய் பகுதிகளைச் சீரமைத்தல்

சாலை பழுதுபார்ப்பு முடிக்கப்பட்டதும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், "எங்களுக்கு இதுதான் ஸ்கூல், காலேஜ் போறதுக்கு முக்கியமான வழி. ஆனா இந்த ரோடு சரியில்லாததால வேற வழி மாறி பல கிலோமீட்டர் சுத்திட்டுப் போவோம். இதுவே தினம்தினம் போராட்டமா இருந்துச்சு! ஆனா இனி அந்தப் பிரச்னை இல்லை. இனிமே தினமும் இதே வழியில நிம்மதியாவும் பாதுகாப்பாவும் போவோம்" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.

``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இசைத்த ஆளுநர் ரவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மைய... மேலும் பார்க்க

`` ஈரோடு வரும் விஜய்; காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள்" - தேதியை அறிவித்த செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் க... மேலும் பார்க்க

”குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: 2027-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்”-இஸ்ரோ தலைவர் நாராயணன்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் வருகை புரிந்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அ... மேலும் பார்க்க

Tax: ``இந்திய பொருள்களுக்கு 50% வரி" - மெக்சிகோ அறிவிப்பால் அதிக பாதிப்பு யாருக்கு?

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி, அபராதம் என விதித்திருந்தது விவாதமான நிலையில், இப்போது மெக்சிகோவும் இந்தியா மீது 50% வர... மேலும் பார்க்க

"கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை" - தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்

பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க... மேலும் பார்க்க

"கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" - தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!

இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி த... மேலும் பார்க்க