செய்திகள் :

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது!

post image

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தொடர்ந்து விவதிக்கப்பட்டு வருகிறது. அது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டார். அந்தப் பதிவை விமர்சித்து பைங்குளம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தேங்காய்ப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த நபரின் சமூக வலைதளத்தில் இருந்து அவரின் 16 வயது மகளின் புகைப்படத்தை மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ் என்பவர் எடுத்துள்ளார். அந்தச் சிறுமியின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆபாசமாகச் சில கருத்துகளையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தூண்

தன் மகள் குறித்த அந்தப் பதிவை பார்த்து அதிர்ச்சியடைந்த தேங்காய்ப்பட்டணத்தைச் சேர்ந்த நபர், இது குறித்து நாகர்கோவில் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். அது குறித்து விசாரித்த சைபர் க்ரைம் போலீஸார், பதிவிட்டவர் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு துணைத் தலைவர் சுரேஷ்குமார் என்பது தெரியவந்தது. சிறாருக்கு எதிரான விவகாரம் என்பதால், நடவடிக்கைக்காக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் பரிந்துரை செய்தனர்.

கைது செய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி சுரேஷ்குமார்

இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்தனர். சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன், தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் கருத்து பதிவிட்ட மார்த்தாண்டம் சாங்கையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (46) மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து குளச்சல் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த ... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் மிரட்டல், படுகொலை: சேனா வேட்பாளருக்கு கத்திக்குத்து, எதிர்க்கட்சி நிர்வாகி படுகொலை!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, சிவசேனா(உத்தவ்) கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ... மேலும் பார்க்க

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ... மேலும் பார்க்க