தேமுதிக: ``28 லட்சம் மக்கள் கலந்துகொண்ட மாநாடு அசம்பாவிதம் நடந்ததா?'' -தேனியில் ...
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; சென்னை நிலவரம் எப்படி?
தமிழகத்தில் இன்று (நவ. 17) முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

இலங்கை கடேலாரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு - வடமேற்கு திசையில் நகர்வதனால் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை (நவ. 18) சென்னை மட்டும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாட்டங்களிலும் தேனியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதன்பிறகு மழைப் படிப்படியாகக் குறைந்து நவம்பர் 19-ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மழை வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதைக் காட்டுவதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.















