மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகு...
தேமுதிக: ``28 லட்சம் மக்கள் கலந்துகொண்ட மாநாடு அசம்பாவிதம் நடந்ததா?'' -தேனியில் பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'உள்ளம் தேடி! இல்லம் நாடி!' என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது வான வேடிக்கைகளுடன் மேளம் முழங்க தேவராட்டத்துடன் பிரேமலதா விஜயகாந்த்துக்கு தே.மு.தி.கவினர் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
அப்போது உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், ``2005-ல் நடந்த தே.மு.தி.க மாநாடு, இதுவரை வரலாற்றில் அப்படி ஒரு மாநாடு நடந்ததே இல்லை.
சுமார் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட நம் மக்கள் அதில் கலந்துகொண்டார்கள். ஆனால், அங்கு ஒரு சிறு அசம்பாவிதம் நடந்ததா?
ஆனால் இப்போது யார் யாரோ மாநாடு நடத்துகிறார்கள். அதில் கலந்துகொள்ளும் மக்களும் நசுங்கி உயிரிழக்கிறார்கள். இதுதான் கேப்டனுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.
எத்தனை லட்சம் மக்கள் வந்தாலும் தனி ஆளாக சிங்கம் போல அத்தனைக் கூட்டத்தையும் கட்டுப்படுத்துவார். சிவாஜி கணேசன் இறந்தபோது வந்த கூட்டத்தை ஒற்றை துண்டை சுழற்றிக் கட்டுப்படுத்தியவர் கேப்டன் விஜயகாந்த்.
அவர் மீது இருந்த மரியாதை கலந்த பயம் எல்லோரிடத்திலும் இருந்தது. உண்மைக்கு மட்டுமே நிற்பார் என்ற மக்களின் நம்பிக்கை அது. அவர் மக்களுக்காக வாழ்ந்தவர்." என்றார்.













