செய்திகள் :

மதிமுக: ``விஜய் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது; அவர் வெற்றிப் பெற வேண்டுமெனில்'' -துரை வைகோ பேச்சு

post image

காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, “பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் பா.ஜ.க அமோக வெற்றி பெறும் என தமிழக பா.ஜ.க தலைவர் பேசியிருப்பது, அவர்களின் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்குதான் பயன்படும்.

இது பெரியார், அண்ணா உலவிய மண். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. பீகாரின் அமோக வெற்றிக்கு முக்கிய காரணம், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு 1.25 கோடி பெண்களுக்கு ரூ.10,000 நிதியாக கொடுத்திருக்கிறார்கள்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ரூ.12,100 கோடி இதற்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் தொழிற்சாலைகள் கிடையாது, கல்விக்கட்டமைப்பு கிடையாது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களுக்கு தினக்கூலிகளாகத்தான் வருகிறார்கள்.

அவர்கள் உழைக்கிறார்கள்; அவர்களுக்கு தமிழ்நாடு மக்களும் ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், அந்த மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்ற தொழிற்சாலைகளை உருவாக்க இந்த ரூ.12,000 கோடியை செலவழித்திருக்கலாம். மகாராஷ்டிரா தேர்தலின் போதும் இதேபோலதான் திட்டத்தின் மூலம் பணம் கொடுத்தார்கள்.

த.வெ.க நடத்திய SIR-க்கு எதிரான போராட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை. அவர் மிகப் பெரும் திரைநட்சத்திரம். அவருக்குப் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

அதனால்தான் இளைஞர்களில் சிலர் அவர் பின்னால் இருக்கிறார்கள். அதே நேரம் சினிமா வேறு, அரசியல் வேறு. அரசியல் மிகவும் கடினமானது.

விஜய்
விஜய்

அவர் வெற்றி பெற வேண்டுமெனில் மக்களை நேரடியாகச் சென்று சந்திக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் போராட்டங்களில், ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் தலைவராக அவரும் கலந்துகொள்ள வேண்டும்.

கொள்கை விரோதி பா.ஜ.க என உறுதியாக அறிவித்திருக்கிறார். எனவே, அந்த பா.ஜ.க-வுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு கொடுத்துவிடக் கூடாது என்பதுதான் என் விருப்பம். அவருக்கு காலப்போக்கில் எல்லாம் தெரியவரும் என நம்புகிறேன்," என்றார்.

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க

தாசில்தாரைக் கடித்த வெறிநாய்கள்; களத்தில் இறங்கிய கலெக்டர்; அலுவலர்களுக்கு நோட்டீஸ்

தாசில்தார் ஒருவரை வெறி நாய் கடித்த சம்பவத்தால் கலெக்டரே களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மேசியதாஸ்சிவகங்கையில் வசிக்கும் மாவட்ட தேர... மேலும் பார்க்க

கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.அதன்படி, அடுத்த ஆண... மேலும் பார்க்க

தேமுதிக: ``28 லட்சம் மக்கள் கலந்துகொண்ட மாநாடு அசம்பாவிதம் நடந்ததா?'' -தேனியில் பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'உள்ளம் தேடி! இல்லம் நாடி!' என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது வான வேடிக்கைகளுடன் மேளம் முழங்க தேவராட்டத்துடன் பிரேமலதா ... மேலும் பார்க்க

``விஜய் முதல்வராக வருவதை தடுக்க SIR-ல் திமுக முறைகேடு செய்கிறது'' - தவெக நிர்மல்குமார் குற்றச்சாட்டு

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக மதுரையில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்க வந்த மாநில இணை பொதுச்செயலாளர் சி.டி நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தீவிர வாக்காளர் திருத்தத்தை எ... மேலும் பார்க்க

வீதிக்கு வந்த லாலு குடும்ப சண்டை: `செருப்பால் தாக்கிய தேஜஸ்வி?’ வீட்டிலிருந்து வெளியேறிய 3 மகள்கள்

பீகார் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வி லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. லாலு பிரசாத்திற்கு சிறு... மேலும் பார்க்க