போதை: பள்ளிப் பேருந்தின்மீது கல்வீச்சு;`ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில்'- எடப்பாட...
தென்காசி: "தென்மாவட்டங்களில் நடக்கும் கனிமவள கொள்ளைக்கு காட்ஃபாதர் அப்பாவு" - திலகபாமா குற்றச்சாட்டு
தென் மாவட்டங்களிலிருந்து, வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு வரும் கனிம வளக் கொள்ளையைக் கண்டித்து தென்காசி மாவட்டம், தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா பங்கேற்று கனிம வள கொள்ளைக்கு எதிராகவும், தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பா.ம.க-வினர் பங்கேற்றனர்.

குறிப்பாக, கனிமவளக் கொள்ளைக்கு முக்கிய காரணம் தி.மு.க-வினர்தான் எனவும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன.
அதிலும் தென் மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்குக் கடத்தப்படும் கனிமவளக் கொள்ளை முக்கிய காரணமே தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுதான் எனவும் அந்த வகையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கனிமவளக் கொள்ளைக்கு காட்ஃபாதராக செயல்பட்டு வருகிறார் எனவும் கடுமையான குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.
எனவே இந்தக் கனிம வள கொள்ளைக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதாக திலகபாமா தெரிவித்தார்.














