செய்திகள் :

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற வழக்கு; சோனம் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

post image

மேகாலயாவிற்கு கடந்த ஆண்டு தேனிலவு சென்றபோது தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ததாக சோனம் ரகுவன்ஷி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக சோனம் ரகுவன்ஷியும், அவரது காதலன் ராஜ் சிங் குஷ்வாஹாவும் கைது செய்யப்பட்டனர். இதில் ஷில்லாங் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் சோனமுக்கு ஜாமீன் வழங்கியது. மேகாலயா உயர் நீதிமன்றம் ஜூன் 29 அன்று சோனமுக்கு வழங்கிய ஜாமீனை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, மாநில அரசு இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இம்மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஷீல் நகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து சுப்ரீம் கோர்ட் சில அதிருப்திகளை வெளிப்படுத்திய போதிலும், சோனம் ஏற்கெனவே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டி, அதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தைக் கவனிப்பதாக நீதிபதிகள் கூறினர். மேலும், இது தொடர்பாக சோனமுக்கு நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிட்டனர்.

இந்த விசாரணையின் போது, மேகாலயா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புனே மலையில் இருந்து வருங்கால கணவனை பெண் ஒருவர் தள்ளிவிட்டுக் கொலை செய்ததையும் சுட்டிக்காட்டினார். சோனமுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையான தன்மை கொண்டவை என்றும், தொழில்நுட்பக் காரணங்களை முன்னிறுத்தி அவரை ஜாமீனில் விடுவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்ஷி, தனது கணவர் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

அவர்களுக்கு கடந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் நடந்தது, பின்னர் அவர்கள் மே 20 அன்று மேகாலயாவின் சோஹ்ரா (செராபுஞ்சி) பகுதிக்கு தேனிலவு சென்றனர். மூன்று நாள்களுக்குப் பிறகு தம்பதியினர் திடீரென மாயமாகினர், பின்னர் ஜூன் 2 அன்று ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

25 வயதான சோனம், ஜூன் 9 அன்று உத்தரப் பிரதேசத்தின் காஜிபூரில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரது காதலனான ராஜ் சிங் குஷ்வாஹாவும் பின்னர் கைது செய்யப்பட்டார். ஷில்லாங் மாவட்டச் சிறையில் சுமார் 10 மாதங்கள் நீதிமன்றக் காவலில் இருந்த பிறகு, கடந்த ஏப்ரல் 27 அன்று விசாரணை நீதிமன்றம் சோனமுக்கு ஜாமீன் வழங்கியது. அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை போலீஸ் முறையாகத் தெரிவிக்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. கைது நினைவூட்டல் கடிதம் உள்ளிட்ட கைது தொடர்பான அனைத்து ஆவணங்களிலும், கொலைக் குற்றத்தைக் கையாளும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 103(1)-க்கு பதிலாக தவறாகப் பிரிவு 403(1) என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது

ஆவணங்கள் எதிலுமே அவர் கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப்படுகிறார் என்பது தெரிவிக்கப்படாததால், இந்தத் தொடர் பிழையை வெறும் எழுத்துப்பிழையாக மட்டும் கருத முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், கைது செய்யப்படும் சமயத்தில் அவர் மீது சுமத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றத்திற்கான குறிப்பிட்ட உண்மைகளும் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரின் கைது ஆவணங்கள் கவனக்குறைவாகவும், போதிய ஆலோசனையின்றி தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, அரசுத் தரப்பு மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது. தட்டச்சுப் பிழை என அரசு வாதிட்டாலும், ஆவணங்களில் தேவையற்ற தகவல்கள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க