செய்திகள் :

"நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல்" - திமுக வை தாக்கும் தவெக விஜய்

post image

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் மக்கள் சந்திப்பு என்பதால், பலத்த பாதுகாப்புடன் சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர் ஜேப்பியர் தொழில்நுட்ப தனியார் கல்லூரி வளாகத்தைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் பவுன்சர்கள் பணியில் நிறுத்தப்பட்டு இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்
தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்
தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்
தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்
தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்
தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்
தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்
தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்
தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்
தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட ஓய்வு பெற்ற காவல்துறையினர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு சார்பில் கடந்த நான்கு நாட்களாக தவெகவின் தொண்டரணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அந்தத் தொண்டரணியினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசியிருக்கும் விஜய், "'நாட்டுக்காக உழைக்கவே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில்தான் நாள் முழுக்க கண்ணா இருந்தார்' என்று எம்.ஜி.ஆர் அண்ணாவைப் பற்றி பாடலில் சொன்னார். அப்படிப்பட்ட அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம்.

அறிஞர் அண்ணா ஆரம்பிச்ச கட்சியை, அவருக்குப் பிறகு கைப்பற்றி இப்போ என்னவெல்லாம் பண்றாங்கனு எல்லாரும் பார்த்துகிட்டுதான் இருக்காங்க. நான் எந்தக் கட்சியை சொல்றேனு எல்லாரும் தெரியும்னு நினைக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் அவங்களுக்கும், எங்களுக்கும் எந்த சண்டையும், வன்மமும் இல்லை. ஆனால், மக்களை நம்பவச்சு நம்மள ஓட்டு போட வச்சு துரோகம் பண்றவங்கள, நாடகம் ஆடுறவங்கள எப்படி கேள்வி கேட்கமால் இருக்க முடியும்.

பேரறிஞர் அண்ணா, 'மக்களிடம் செல், மக்களுக்கு சேவை செய்' என்றார். அதை மறந்துவிட்டார்கள் அவர்கள். நாம்தான் அதைச் செய்கிறோம்.

கொள்கை இல்லைனு சொல்றாங்க. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ, சமூகநீதி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எங்கள் தவெக கட்சி.

CAA எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நிதிமன்றம்வரை நீதி கேட்டு போனோம், கல்விய மாநில பட்டியல்ல சேர்க்கனும்னு சொன்னோம், சமத்துவம், சமவாய்ப்பு என நீதிகேட்ட தவெக விற்கு கொள்கை இல்லையா?

தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்
விஜய்

கொள்கைய வெறும் பேச்சுல மட்டும் பேசிட்டு இருக்காங்க. இவங்க கொள்கையே கொள்ளைதானே.

'எங்க கட்சி சங்கர மடம் இல்லைனு' சொன்னது யாரு? யார் சொன்னாங்க, எதுக்கு சொன்னாங்க. இப்போ உங்க கட்சியில என்ன நடக்குதுனு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

அதுனால 'பாப்பா பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாத பாப்பா. நீ நல்லவர்களைப் போல நடிப்பதைப் பார்த்து நாடே **** பாப்பா' னு சொன்னதையே இன்னும் சீர்யஸ எடுத்துகிட்டு இருக்கீங்க. நாங்க இன்னும் உங்கள விமர்சனம் பண்ணாவே ஆரம்பிக்கல. நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே. அதுக்குல்ல அலறுனா எப்படி?" என்று 'திமுக' வை தாக்கிப் பேசியிருக்கிறார் விஜய்.

மதுரை: சீரமைக்கப்படாத மலைச்சாலை; கண்டுகொள்ளாத அரசு; 40 ஆண்டுகளாக அவதிப்படும் மக்கள்; பின்னணி என்ன?

மதுரை - தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் - மயிலாடும்பாறை சாலையைச் சீரமைத்து, பொதுப்போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க ... மேலும் பார்க்க

”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அப்பாவு

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. அப்போது பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வ... மேலும் பார்க்க

Sanitary Workers : கொளத்தூரில் முதல்வரை எதிர்த்து தூய்மைப் பணியாளரை போட்டியிட செய்வோம்! - கு.பாரதி

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் அம்பத்தூரில் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை... மேலும் பார்க்க

`திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிறதா?’ முந்தி அறிவித்த ப.சி; `திடீர்’ குழு அமைப்பின் பின்னணி!

2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தி.மு.க, கா... மேலும் பார்க்க

சேலம் திமுக நிர்வாகி கொலை: ``ரூ. 5000-க்கு துப்பாக்கிகள் கிடைக்கின்றன" - அன்புமணி குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரும், விவசாயியுமான ராஜேந்திரன் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

`வேட்புமனு வாபஸ் அச்சம்’ - கூட்டணியில் இருந்தும் வேட்பாளர்களை ஹோட்டலில் தங்கவைத்த பாஜக, சிவசேனா

மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, மனுவை வாபஸ் பெறும் நாள் நேற்றோடு முடிந்தது. வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாளி... மேலும் பார்க்க