மேகதாது: `தமிழர்களுக்கு எந்த வகையிலும் துரோகம் இழைக்கக் கூடாது என்பதில்...' - அம...
நாலு பேருக்கு நன்றி! - அனுபவப் பகிர்வு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஒவ்வொருவர் வாழ்விலும் எப்போதும் மறக்க முடியாத நிகழ்வுகள் பல இருக்கும். அதேபோல் மறக்க முடியாத மனிதர்களும் பலர் இருப்பார்கள். நல்லவர்கள், நம்மை காயப்படுத்தியவர்கள், கண்ணீர் சிந்தும்படி கஷ்டப்படுத்தியவர்கள் என்று மனமெனும் குளத்தில் கல் எறிந்தவர்கள் பலருண்டு. ஆனால் நல்லதையே எண்ண வேண்டும் என்பதால் இவர்களில் என் எவரெஸ்ட் நினைவில் நிற்கும் அந்த நல்லவர்கள் நாலு பேருக்கு இந்த நன்றி கட்டுரை என் காணிக்கை.

முதல் நன்றி!
நான் காந்திகிராமத்தில் படித்த காலத்தில் ஒரு முறை விடுப்பில் ஏழெட்டு தோழிகள் சேர்ந்து குற்றாலம் சென்றோம். ஒரு நாள் தென்காசியிலிருந்த தோழியின் வீட்டில் தங்கி தென்பொதிகைத் தென்றலையும் சாரலையும் அருவிக் குளியலையும் அனுபவித்து விட்டு கிளம்பினோம்.மதுரை வரை எலலோரும் ஒன்றாகப்பயணித்தோம்.
பிறகு அவரவர் திசைக்கு பிரிந்தனர்.
என் தோழியும் எங்க வீட்டுக்கு வர விரும்பியதால் இருவரும் கோவை பேருந்தில் ஏறி முன்சீட்டில் அமர்ந்து கொண்டோம். பஸ் கிளம்பியதும் அசதியில் உறங்கிவிட்ட நாங்கள் கண்டக்டரின் பலத்த குரல் கேட்டு விழித்தோம்.
"ஒட்டன்சத்திரம் வந்தாச்சு. பஸ் கால்மணி நேரம் இங்க நிக்கும். டீ, காபி குடிக்கிறவங்க டிபன் சாப்பிடறவங்க , பாத்ரூம் போறவங்க எல்லாம் சீக்கிரம் போயிட்டு வந்துடுங்க , இடையிலெ பஸ் நிக்காது. அண்ணா நான் போய் ஆர்டர் பண்றேன், நீங்க வாங்க,"என்று டிரைவரிடம் கூறிவிட்டு இறங்கி சென்றார். பையில் பணத்தை காணோமென்று பசியுடன் பதட்டத்துடன் தேடிக்கிட்டு இருந்த எங்களைப் பார்த்த டிரைவர் "என்னம்மா ! எல்லாரும் இறங்கிப் போய்ட்டாங்க ,உங்களுக்கு பசிக்கலையா", ,என்றார். "இல்லண்ணா"ன்னு சொல்லி விட்டு அமைதி காத்தோம். "அப்ப சரி வண்டியை பாத்துக்கங்க" ன்னு சிரிச்சுட்டு இறங்கிப்போனார்.

மீண்டும் யோசிச்சு தேடியபோது புத்தகத்தின் நடுவில் வைத்தது நினைவு வர உடனே பணத்தை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு ஓடினோம். பல பேர் சாப்பிட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கண்டக்டர் சொன்ன நேரம் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. அது நின்று கொண்டே சாப்பிடும் படி இருந்த ஹோட்டல். மனது பூரிக்கும் ரோஸ்ட்டுக்கும் ஆசைப்பட்டாலும் இருந்த இட்லியை வாங்கி அவசர அவசரமாக சாப்பிட்டோம் " மெதுவா சாப்பிடுங்கம்மா! இத்தனை நேரம் என்ன பண்ணுணீங்க?டிரைவர் பாத்ரூம் போயிருக்கார். சாப்பிட்ட உடன் சீக்கிரம் வந்துருங்க"என்று சொல்லி விட்டு வெளியில் நின்றார் கண்டக்டர்.அவசரமா சாப்பிட்டு பில் தர கல்லாமேஜைக்கு சென்றபோது அவர்கள் பேசியது காதில் விழுந்தது.
"என்னண்ணா ! ,,வயிறு ஏதும் சரியில்லையா? இத்தனை நேரம் ஆயிடுச்சு. சரி போலாமா "என்றார் கண்டக்டர்.
" இல்ல தம்பி! வயித்துக்கு ஒண்ணுமில்ல. அந்தப்பொண்ணுக ரெண்டும் காசைக்காணாம சாப்பிட வராம இருந்ததுக. முகத்துல பசி வேற தெரிஞ்சுது நம்ம குடுத்தாலும் வாங்க மாட்டாங்க . நம்ம சாப்பிடறப்ப அதுக ஓடி வந்தத பாத்தேன்.காசு கண்டு பிடிச்சுட்டாங்க போல,சரி சாப்பிட்டு வரட்டும்னுதான் அந்தப் பக்கம் போனேன். இதெ மத்த பேஸஞ்சர்கிட்ட சொல்ல முடியாதல்ல. அதான் அந்தப்பக்கம் போனேன். சரியா, வா போலாம்" என்றார் டிரைவர்.
இதைக் கேட்ட எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. வீட்டில் பெத்தவங்க காட்டும் அன்பு அவர் மூலம் வெளிப்பட்டதை மனதார உணர்ந்தோம் .பல்லடம் லட்சுமி மில்ஸில் இறங்கும் போது அவருக்கு வெறும் பார்வையால் மட்டுமே நன்றி சொல்ல முடிந்தது.
அண்ணா! இப்போது நீங்க எங்க எப்படியிருக்கீங்களோ தெரியாது.
உங்களுக்கு இதுநினைவில்கூட இல்லாதிருக்கலாம்.இது போல எத்தனையோ பணிக்கால அனுபவங்கள் உங்களுக்கு
ஏற்பட்டிருக்கலாம் ,ஆனால் உங்கள் மீது ஏற்பட்ட நன்றி உணர்வு இ ந்தத் தங்கையின் இறுதிக் காலம் வரை நிலைத்திருக்கும்.
உரிய உயர்வு தரும் அலகு ஆகும்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.


















