Ajith: ''அவரைப் பார்த்த நொடியிலேயே அது புரிந்தது!" - அஜித்தை சந்தித்த சூரி
நாலு வருஷமா வள்ளியூர் கோர்ட்டுல ஆஜராகிட்டு வர்றேன்; ஆனா...! - பிக் பாஸ் தினேஷ்
பிக் பாஸ் தினேஷ் கைது செய்யப்பட்டதாகப் பரவிய செய்தியை மறுத்துள்ளார் அவர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாக திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் புகார் தந்ததாகவும் அதன்பேரில் நடிகர் தினேஷ் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் இன்று காலை சில செய்திச் சேனல்களில் செய்தி வெளியாகியது.
இது தொடர்பாக தினேஷிடம் பேசினோம்.
பணகுடியைச் சேர்ந்த கருணாநிதி என்கிற நபர் தன் மனைவிக்கு மின்சார வாரியத்துல வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி நான் பணம் வாங்கினேன்னு புகார் தந்ததாகத்தான் செய்தி பரவுச்சு.
அந்தப் பணத்தைக் கேட்டப்ப நான் அவரைத் தாக்கியதாகவும் செய்தியை நானுமே பார்த்தேன்.
உண்மை என்னன்னா வேற ஒரு வழக்கு கடந்த நாலு வருஷமா வள்ளியூர் நீதிமன்றத்துல நடந்துட்டு வருது. நான் டிவி சீரியல் தயாரிச்சது தொடர்பான வழக்கு அது.
அந்த வழக்கு கிட்டத்தட்ட முடியுற தருவாயில் இருக்கு. எனக்குச் சாதகமா தீர்ப்பு வரும்கிற நம்பிக்கையும் இருக்கு. நேர்மையா அந்த வழக்கை அணுகிட்டு வர்றேன்.

இந்த நிலையில் இன்னைக்கு வெளியான செய்தி முழுக்க பொய் செய்தி. அதாவது ஒரு புகார் தரப்பட்டிருக்கு. அது தொடர்பா என்னை விசாரிக்கக் கூப்பிட்டாங்க. நான் புகார் தந்தவரைத் தாக்கியாதா சொன்ன அந்த நேரத்துல நான் நீதிமன்றத்துல இருந்தேன். அதற்கான ஆதாரங்களை போலீஸ் ஸ்டேஷன்ல காட்டினதும் விசாரணையை முடிச்சுட்டு அனுப்பிட்டாங்க. அதுக்குள்ள தனக்குத் தெரிஞ்ச மீடியா ஆட்கள் மூலம் என் பேரைக் கெடுக்கிற நோக்கத்துடன் செய்தி பரப்பியிருக்காங்க' என்கிற இவர், இந்தப் புகாருக்குப் பின்னால் நடிகர் நாய்க்குட்டி வினோத் என்பவர் இருப்பதாகச் சொல்கிறார். அவர்தான் வள்ளியூரில் நடந்து வரும் வழக்கில் எதிர்மனுதாரராம்.



















