"ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க"- இயக்குநர் ஜீத்து ஜோசப...
நினைத்த காரியங்கள் வெற்றி பெற வரமளிப்பாள் காரப்பாக்கம் கங்கை அம்மன் திருவிளக்கு பூஜை; அனுமதி இலவசம்!
2025 டிசம்பர் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை ஓ.எம்.ஆர் காரப்பாக்கம் கங்கை அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள்...
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

பல்லவ மன்னர்கள் காலத்தில் புகழ்பெற்ற ஊரான ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, குலோத்துங்க வள நாட்டு ஊர் காரப்பாக்கம். இது அந்நாளைய திருவான்மியூரில் இருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் இருந்தது. இந்த ஊரின் கிராம தேவதையாக அமர்ந்து ஆட்சி புரிந்தவள் கங்கையம்மன். சுமார் 300 ஆண்டுகளாக அப்பகுதியில் சிறந்து விளங்கிய அன்னை கங்கை அம்மன் தற்போது சென்னை நகர் முழுமைக்கும் பிரபலமாகி வருகிறாள்.
நீர் நிலைகள் செழித்திருக்கும் பகுதியில் அந்நீர் நிலைகளை பாதுகாக்க எழுபவளே கங்கை அம்மன். இவ்வூரிலும் அப்படியே எழுந்தருளினார் இந்த அன்னை. ஆரம்பத்தில் வணிகர்களுக்கு வழித்துணையாக இருந்த கங்கை அம்மன் தற்போது இப்பகுதியில் தொழில்-வணிகம் சிறக்க உதவும் பரிகார தேவியாக இருந்து வருகிறாள். ஓ.எம்.ஆர் சாலையில் துரைப்பாக்கம் தாண்டியதும் இடது புற முக்கிய சாலையிலேயே ஆலயம் அமைந்துள்ளது. முன்புற வாசலில் பிரமாண்ட அனுமன் கோயிலும் பின்புற வாசலில் நுழைந்தால் அங்கே அழகிய விசாலமான கங்கை அம்மனின் ஆலயமும் அமைந்துள்ளன.
கும்பிடுபவரின் குறைகளைத் தீர்க்கும் கங்கை அம்மன் பெண்களுக்கு விசேஷமானவர். திருமணம், குழந்தைப்பேறு, மங்கல வாழ்வு, நோய்நொடிகள் தீர்ப்பு, செல்வவளம் என அனைத்தையும் அருள்பவள் இந்த தாய் என்கிறார்கள் பெண் பக்தைகள். புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் வரும் டிசம்பர் 19-ம் நாள் வெள்ளிக்கிழமை அனுமன் ஜயந்தி விழாவும் ஸ்ரீஐயப்ப ஆராதனை விழாவும் நடைபெற உள்ளது. அதோடு சேர்த்து மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.
இத்தனை சிறப்பான ஆலயத்தில் உலக நன்மைக்காகவும் உங்களின் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம். 2025 டிசம்பர் 19-ம் நாள் வெள்ளிக்கிழமை சென்னை ஓ.எம்.ஆர் காரப்பாக்கம் கங்கை அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்!
கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 044-66802980/07


















