"கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு; திமுக செய்த தவறு..." - எடப்பாடி பழ...
`` 'நேத்து முளைச்ச காளான்' என விஜய்யை சொல்லவில்லை" - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!
விஜய் அரசியலில் காலாடி எடுத்து வைத்தது தொடங்கி, தேமுதிக பிரேமலாதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணமிருக்கிறார்.
தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக, திமுக-வோடு கூட்டணி இருக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
நேற்று சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை சுற்றுப் பயணத்தில் பிரேமலதா விஜயகாந்த், "கேப்டன் விஜயகாந்த் இருந்தபோது யாரும் அவரை புரிந்துகொள்ளவில்லை.வாழ்க்கை ஒரு வட்டம். கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள்.
அதேபோல், மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள் மாற்றம் ஒன்றே மாறாதது. நேத்து முளைச்ச காளான் எல்லாம் இங்க எடுபடாது. அந்த மாற்றம் மக்களுக்கு நல்லது நடக்கின்ற சிறந்த மாற்றமாக இந்த தேர்தல் அமையும். யார்? யாரையோ நம்பி ஓட்டு போடுகிறீர்கள். தேமுதிகவிற்கு ஏன் வாய்ப்பு கொடுக்கக் கூடாது?" என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் பிரேமலதா 'நேத்து முளைச்ச காளான்' என்று விஜய்யை குறிப்பிட்டாரா?' என்று சர்ச்சை கிளம்பிவிட்டது.
இதற்கு விளக்கமளித்திருக்கும் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், "நான் விஜய்யை 'நேற்று முளைத்த காளான்' என்று சொல்லவில்லை. விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை கூத்தாடி என நாங்கள் தாக்கிப் பேசவில்லை. விஜய்க்கு எப்போதும் தேமுதக எதிர்ப்பு தெரிவித்ததில்லை. சினிமாவைப் போல் அரசியலிலும் அவர் சாதிக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்













