``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இச...
பவுனுக்கு ரூ.98,000-த்தை தொட்ட தங்கம் விலை; இப்போது தங்க நகை அடமானக் கடன் வாங்கலாமா?!
இன்று தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்னொரு பக்கம், விலைவாசியும் உயர்ந்திருக்கிறது. அடுத்தடுத்து தேவைகளும் அதிகரிக்கிறது.
இந்த நேரத்தில் கையில் இருக்கும் தங்க நகையை அடமானம் வைத்து கடன் வாங்கலாம் என்கிற யோசனை தோன்றலாம்.
'இந்த யோசனை சரியானது தானா?' - My Assets Consolidation நிறுவனர் சுரேஷ் பார்த்தசாரதி விளக்குகிறார்.
இப்போது தங்கம் விலை உச்சத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில், தற்போது தங்க நகை அடமானக் கடன் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
அடுத்து சில தினங்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகளும் உண்டு. அதனால், ஒரு பேச்சிற்கு தங்கம் விலை குறைந்துவிட்டது என்று எடுத்துகொள்வோம்.
அந்த மாதிரியான நேரத்தில், நீங்கள் இப்போது வாங்கியிருக்கும் கடன் தொகைக்கு நிகரான தங்கத்தைக் கடன் வாங்கிய வங்கியிடமோ, நிறுவனங்களிடமோ தர வேண்டியதாக இருக்கும்.
அந்தளவுக்கு தங்கம் அனைவரிடமும் இருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. இதில் ரிஸ்க் அதிகம்.
அதனால், தங்கம் விலை உயரும் நேரத்தில், தங்க நகை அடமானக் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
'கட்டாயம் வாங்கித்தான் ஆக வேண்டும்' என்கிற சூழல் ஏற்பட்டால், தங்க நகை மதிப்பில் 65 - 70 சதவிகிதத்தை மட்டும் கடனாக பெறுங்கள்.
ஒருவேளை தங்கம் விலை குறைந்தால், அப்போது அதிக தங்கத்தைக் கொடுக்க வேண்டிய சூழல்களை தவிர்க்க முடியும்."




















