செய்திகள் :

பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார் - அதிகாலையில் உயிர் பிரிந்த சோகம்

post image

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 40,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். மாரடைப்பால் உயிர் பிரிந்ததாகத் தெரிய வருகிறது,

ஆந்திராவின் குண்டூர் அருகே பிறந்த ஜானகி, சினிமாவில் பாடத் தொடங்கியதும் சென்னைக்கு குடி வந்தார். பிறகு ராம் பிரசாத் என்பவரை மணந்தார்.

இந்த தம்பதிக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே மகன். சில படங்களில் நடித்திருக்கும் முரளி, ஐதராபாத்தில் வசித்து வந்தார். முரளிக்கு சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் உமாவுடன் திருமணம் நடைபெற்றது.

எஸ். ஜானகி

முரளி – உமா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஆனால் பிரச்னைகள் காரணமாக இந்த தம்பதியிடையே விவாகரத்து ஆகி விட்டது. மகள்கள் இருவருக்கும் திருமணம் முடித்து கொடுத்து விட்டார் உமா.

முரளி தன் அம்மாவுடன் வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக முரளி காலமாகி விட்டார்.

எஸ்.ஜானகிக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Rajini:``அவர்கள் என்னை 'டேய் சிவாஜி' என அழைத்து பேசும்போது" - குதூகலத்துடன் பேசிய நடிகர் ரஜினி

கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 - 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் க... மேலும் பார்க்க

"நீங்க அத்தனை கதை கேட்டால் தூங்காமல் இருந்திருப்பீங்களா?" - செய்தியாளரின் கேள்விக்கு அஸ்வின் காட்டம்

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 'ஹாட்ஸ்பாட்' படத்தின் முதல் பாகம் கடந்த 2024-ம் ஆண்டு திரைக்கு வந்திருந்தது.அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ப்ரியா பவ... மேலும் பார்க்க

`100 பேர் முன் மன்னிப்பு கேட்டேன்; அப்பவும் விடலை!' மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார்

பிப்ரவரியில் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தன்னைப் போட்டியிட விடாமல் தடுக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார் ‘ம... மேலும் பார்க்க

`இங்கே யானைகள்தான் வாழ முடியுமா... எறும்பு வாழ முடியாதா?' - வசந்த பாலன் ஆதங்கம்

ஓடிடி தளங்கள் மீதான ஆதங்கம் பற்றியும், சின்ன பட்ஜெட் படங்கள் திரைக்கு வர முடியாமல் தவிப்பது பற்றியும் இயக்குநர் வசந்த பாலன் முகநூலில் சிறு குறிப்பாக எழுதியிருந்தார். அவரிடம் இது பற்றியும் சற்று விரிவா... மேலும் பார்க்க