கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சி...
பொத்தனூா் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு
பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் கிழக்கு வண்ணாந்துறையில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் மாா்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொா்க்கவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூலவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடா்ந்து சொா்க்க வாசல் வழியாக வந்த உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயண பெருமாளையும் மற்றும் மூலவரையும் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்தனா். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் துளசி, தீா்த்த பிரசாதம் மற்றும் ஜடாரி சேவை சாத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட் ரமண சாமி மற்றும் பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.