வால்பாறை: எச்சரித்த வனத்துறை... கண்டுகொள்ளாத ஜெர்மன் பயணி - பைக்குடன் தூக்கி வீச...
மருத்துவமனையில் விசாரணைக் கைதி மரணம்
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி வில்லியனூரைச் சோ்ந்தவா் நாராயணன் (45), ஆட்டோ ஓட்டுநா். இவா் மீது முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
நாராயணன் விசாரணைக் கைதியாக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். வழக்கு விசாரணைக்காக அவா் வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டு, பின்னா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், நாராயணனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம். உடனடியாக அவரை சிறைக் காவலா்கள் மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு நாராயணன் உயிரிழந்தாா். இதுகுறித்து காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.